»   »  சன்னி போன்று இன்பம் ட்வீட்: மன்னிப்பு கேட்ட ராம் கோபால் வர்மா, ஆனால்...

சன்னி போன்று இன்பம் ட்வீட்: மன்னிப்பு கேட்ட ராம் கோபால் வர்மா, ஆனால்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சன்னி லியோன் போன்று பெண்கள் ஆண்களுக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்று ட்வீட்டியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

இயக்குனர் ராம் கோபால் வர்மா மகளிர் தின வாழ்த்து தெரிவித்து ட்வீட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தனது ட்வீட்டில், உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இதை பார்த்த பலரும் கொந்தளித்துவிட்டனர்.

புகார்

புகார்

மகளிர் தினத்தன்று பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ட்வீட்டியதாகக் கூறி ராம் கோபால் வர்மா மீது ஒருவர் கோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மன்னிப்பு

மன்னிப்பு

தனக்கு எதிராக பலரும் கொந்தளித்து வருவதை பார்த்த ராம் கோபால் வர்மா ட்விட்டர் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

ட்வீட்

நான் என் உணர்வுகளை தான் வெளிப்படுத்தினேன். மகளிர் தினம் என்ற பெயரில் போட்ட என் ட்வீட்டுகளால் மனம் புண்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

ராம் கோபால் வர்மா

பப்ளிசிட்டிக்காக பேசுபவர்கள், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு மிரட்டுபவர்களுக்கு அல்ல என் ட்வீட்டால் உண்மையாகவே மனம் புண்பட்டவர்களிடம் மட்டுமே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என ட்வீட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா.

English summary
Director Ram Gopal Varma tweeted that, 'Was just expressing my feelings but I apologise to all who were offended due to my unintended insensitive tweets in context of women's day.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil