twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜல்லிக்கட்டு தீவிரவாதிகள், காட்டுமிராண்டிகள்: திமிரு தலைக்கேறி ஆடும் ராம் கோபால் வர்மா

    By Siva
    |

    ஹைதராபாத்: காளைகளை டார்ச்சர் செய்யத் துடிக்கும் தமிழகத்தின் பெயரை ஜல்லிக்கட்டு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராம் கோபால் வர்மா திமிராக ட்வீட்டியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தீவிரவாதிகள், காட்டுமிராண்டிகள் என விமர்சித்துள்ளார்.

    இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஏதாவது ட்வீட்டி சர்ச்சையில் சிக்கி நெட்டிசன்களிடம் திட்டு வாங்கவில்லை என்றால் தூக்கம் வராது போல. தமிழக மக்கள் தமிழ் உணர்வுடன் ஜல்லிக்கட்டுக்காக போராடுவதை இழிவுபடுத்தி ட்வீட் போட்டுள்ளார்.

    இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    ஜல்லிக்கட்டு

    தமிழ்நாட்டின் பெயரை ஜல்லிக்கட்டு என்று மாற்ற வேண்டும் என பீட்டா ஐ.நா.விடம் கோரிக்கை விடுக்க வேண்டும். டார்ச்சர் செய்ய துடிக்கும் மாநிலத்திற்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய கலாச்சாரமற்ற மாநிலம் என பதிவு செய்ய வேண்டும்.

    பிரபலங்கள்

    தமிழகத்தின் சர்வாதிகார அரசியல்வாதிகளை பார்த்து பிரபலங்கள் பயந்து நடுங்குகிறார்கள். அப்பாவி விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதில் இருந்தே அவர்களின் கோழைத்தனம் தெரிகிறது.

    பீட்டா

    பீட்டாவை குறிவைப்பதன் மூலம் ஜல்லிக்கட்டு தீவிரவாதிகள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்பது தெரிகிறது. அவர்களின் அறிவு ஆப்பிரிக்காவில் உள்ளவர்களை விட பின்னோக்கியுள்ளது.

    த்ரிஷா

    த்ரிஷாவை தாக்கியதன் மூலம் ஜல்லிக்கட்டு விலங்குகள் தாங்கள் அடக்க நினைக்கும் காளைகளை விட மோசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

    உச்ச நீதிமன்றம்

    அப்பாவி விலங்குகளை கொடுமைப்படுத்துவதை ஆதரிக்கும் மக்கள் தான் உண்மையான விலங்குகள் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்திருக்கும் என நம்புகிறேன்.

    காளைகள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒவ்வொருவரையும் ஆயிரம் காளைகளை விட்டு துரத்த விட வேண்டும். அதன் பிறகு அவர்கள் எவ்வளவு போராடுகிறார்கள் என்று பார்ப்போம்?

    English summary
    Director Ram Gopa Varma has insulted the Tamils who are portesting in support of Jallikattu. He even calls them as terrorists and barbarians.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X