»   »  ராம் கோபால் வர்மா "போய்ட்டாராமே"... வதந்தியைப் பரப்பிய பவன் கல்யாண் ரசிகர்கள்!

ராம் கோபால் வர்மா "போய்ட்டாராமே"... வதந்தியைப் பரப்பிய பவன் கல்யாண் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சர்ச்சை இயக்குநர் என்று பெயரெடுத்த தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா இறந்து விட்டதாக எழுந்த வதந்தி காட்டுத்தீ வேகத்தில் பரவி இணையத்தை வைரலாக்கி உள்ளது.

ராம் கோபால் வர்மா இறந்து விட்டார் இதனை அனைத்து பவன் கல்யாண் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் உடனடியாகப் பரப்ப வேண்டும் என்று ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கின்றனர்.

இதனை அறிந்த ராம் கோபால் வர்மா பவன் கல்யாண் ரசிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மகேஷ்பாபு ரசிகர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

தெலுங்கு இயக்குநர் மற்றும் சர்ச்சைகளுக்குப் பெயர்பெற்ற இயக்குநர் ராம் கோபால் வர்மா இறந்துவிட்டதாக தெலுங்குலகின் பவர்ஸ்டார் என்று பெயரெடுத்த பவன் கல்யாணின் ரசிகர்கள் சமீபத்தில் வதந்தியை பரப்பி உள்ளனர். மேலும் ராம் கோபால் வர்மாவின் இறுதி ஊர்வலம் நடப்பது போல புகைப்படங்களை உருவாக்கி அதனை ட்விட்டரில் ஷேர் செய்திருக்கின்றனர்.

ஒவ்வொரு ரசிகரும்

பவன் கல்யாணின் ஒவ்வொரு ரசிகரும் ராம் கோபால் வர்மா இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து கருத்து சொல்லவேண்டும்.மேலும் கண்டிப்பாக இந்தத் தகவலை மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கொதித்த ராம் கோபால் வர்மா

இதனை அறிந்த ராம் கோபால் வர்மா தற்போது கொதிநிலைக்கு சென்றிருக்கிறார் படிப்பறிவில்லாத பவன் கல்யாண் ரசிகர்கள் மகேஷ்பாபு ரசிகர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

மகேஷ்பாபு ரசிகர்களே

மகேஷ்பாபு ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை படிப்பறிவு மற்றும் தொழிநுட்பத்தில் ஊனமுற்றவர்களாகத் திகழும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு எனது ஆங்கில ட்வீட்களை மொழிபெயர்த்து சொல்லுங்கள் என்று மகேஷ்பாபு ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

பற்றி எரியும் டோலிவுட்

பற்றி எரியும் டோலிவுட்

ராம் கோபால வர்மா விவகாரம் டோலிவுட் வட்டாரத்தில் தற்போது பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் ராம் கோபால் வர்மா பகிரங்கமாக பவன் கல்யாணையும் அவரது ரசிகர்களையும் திட்டியிருப்பதால் இந்த விவகாரம் பெரிதாக உருவெடுக்கலாம் என்று கூறுகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கிராமங்களை தத்தெடுத்த விவகாரம் தொடர்பாக மகேஷ்பாபுவை ராம் கோபால் வர்மா விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Last Tuesday a RIP RGV Message widely Been Circulated on Twitter "Ram Gopal Varma is dead. Cinema Industry is Happy with the death of RGV. Everyone is in celebrations." Ram Gopal Varma Saw the post and he posted "Like I said this is reality of PK fans..hope they will get less uncivilised and his Twitter following will increase". Now Ram Gopal Varma put a series of tweets attacking the Pawan Kalyan fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil