»   »  கால்நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் தெலுங்குக் கூட்டணி!

கால்நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் தெலுங்குக் கூட்டணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சை இயக்குனர் என பெயரெடுத்தவர் ராம் கோபால் வர்மா. முன்பெல்லாம் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறாரோ என அவரது ட்வீட்களுக்காகவே காத்திருப்பார்கள் ரசிகர்கள். சமீபகாலமாக ட்விட்டரில் அடக்கிவாசித்து வருகிறார்.

தெலுங்கில் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் 'லட்சுமியின் என்.டி.ஆர்' படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் என்.டி.ஆரின் மகனான பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார்.

Ram gopal varma and Nagarjuna were reunite after 25 years

இந்தப் படத்தை அடுத்து நாகார்ஜூனாவை வைத்து ஒரு ஆக்‌ஷன் படத்தை இயக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்பு நாகார்ஜூனாவை வைத்து 1990-ம் ஆண்டு 'ஷிவா', 1993-ம் ஆண்டு 'கோவிந்தா கோவிந்தா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா.

அந்தவகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. நாகார்ஜூனா இதுவரையில் நடித்திராத மாதிரியான ஆக்‌ஷன் கதையாக இருக்கும் எனக் குறிப்ப்பிட்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா. இத்தனை வருடங்கள் கழித்து இனைந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Ram Gopal Varma is directing NTR's biographical story 'Lakshmi NTR'. Ram gopal Varma has said that he will direct next an action film with Nagarjuna. In this way, 25 years later, Ram Gopal Varma and Nagarjuna reunite in telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil