twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசிரியை, மாணவன் உறவு... ‘சாவித்திரி’பட போஸ்டர்களால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் ராம்கோபால் வர்மா

    |

    மும்பை: ஆசிரியர், மாணவர் உறவைக் கொச்சைப் படுத்துவது போலவும், ஆசிரியர் தொழிலையே கேவலப் படுத்துவது போலவும் தனது புதிய பட போஸ்டர்களை வெளியிட்டுள்ளதாக பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக பெண்கள் அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது.

    சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விநாயகரின் தலையைத் துண்டித்த சிவன் தீவிரவாதியை விட கொடுமையானவர் என்ற கருத்தை வெளியிட்டு பிரச்சினையில் சிக்கினார்.

    இது தொடர்பாக அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் மன்னிப்பு கேட்டு அந்தப் பிரச்சினையில் இருந்து தப்பினார் ராம்கோபால் வர்மா.

    இந்நிலையில், தற்போது தனது புதிய படத்தின் போஸ்டர்கள் மூலமாக மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

    சாவித்திரி...

    சாவித்திரி...

    பள்ளி மாணவன் -ஆசிரியை பற்றிய கதையை மையமாக கொண்டு ‘சாவித்திரி' என்ற படத்தை தற்போது ராம்கோபால் வர்மா இயக்குகிறார். இதற்கான அறிமுக விழாவில் அவர் படத்துக்குரிய சுவரொட்டியை வெளியிட்டார்.

    ஆபாச சுவரொட்டிகள்...

    ஆபாச சுவரொட்டிகள்...

    அதில், ஆசிரியையின் இடுப்பழகை 10 வயது மாணவன் முறைத்து பார்ப்பது போலவும், படுக்கையில் கால்கள் தெரியும் நிலையில் படுத்து இருக்கும் ஆசிரியையின் கால் அழகை ஜன்னல் வழியாக மாணவர் எட்டிப் பார்த்து ரசிப்பது போலவும் சுவரொட்டிகள் வடிவமமைக்கப் பட்டிருந்தது.

    பெண்கள் அமைப்பினர் ஆவேசம்...

    பெண்கள் அமைப்பினர் ஆவேசம்...

    அறிமுக விழாவிற்குப் பிறகு இந்த சுவரொட்டிகள் ஹைதராபாத்தின் பல இடங்களில் ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டிகளைப் பார்த்து பெண்கள் அமைப்பினர் ஆவேசம் அடைந்துள்ளனர்.

    தவறான வழிகாட்டல்...

    தவறான வழிகாட்டல்...

    ராம்கோபால் வர்மாவின் இந்த ரசனையை விமர்ச்சித்துள்ள அவர்கள், தனது சினிமா மூலம் அவர் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நகரின் பட இடங்களில் சுவரொட்டியைக் கிழித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    என் டீச்சர்...

    என் டீச்சர்...

    இது தொடர்பாக ராம்கோபால் வர்மா கூறும்போது, ‘‘நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கு பிடித்தவர் இங்கிலிஷ் டீச்சர். அவர்தான் சாவித்திரி. எனக்கு கிடைத்த சாவித்திரி போல் உங்கள் வாழ்க்கையிலும் பல சாவித்திரிகள் இருப்பார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

    படத்திற்கு தடை வேண்டும்...

    படத்திற்கு தடை வேண்டும்...

    ராம்கோபால் வர்மாவின் இந்த பேட்டிக்கு பல பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. புனிதமான ஆசிரியை பணியை அவர் கொச்சைப் படுத்தி உள்ளார். தனது மனதில் உள்ள வக்கிரபுத்தியை வெளிக்காட்டி உள்ளார். அவரை கைது செய்ய வேண்டும், அவரது படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்..

    எனது உரிமை...

    எனது உரிமை...

    ஆனால், பெண்களின் இப்போராட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராம்கோபால் வர்மா, ‘என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தெரிவிக்க எனக்கு உரிமை உள்ளது. எனவே இதில் எந்த தவறும் இல்லை'' என விளக்கமளித்துள்ளார்.

    நோட்டீஸ்...

    நோட்டீஸ்...

    இதற்கிடையே குழந்தைகள் நல கமிஷனர் தானாக முன்வந்து ராம்கோபால் வர்மா மீது வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும், இச்சுவரொட்டி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ராம்கோபால் வர்மா, சினிமா தணிக்கை குழு, நகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.

    English summary
    The State Commission for Protection of Child Rights (SCPCR) took up a suo motu case against filmmaker Ram Gopal Varma for a poster of his latest film Savitri.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X