Don't Miss!
- Lifestyle
தம்பதிகளே! நீங்க இருவரும் படம் பார்க்காமல்... அந்த நேரத்தில் இந்த விஷயங்களை முயற்சி செய்யலாமாம்!
- News
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு..இறுதி அறிக்கை எப்போது? சிபிசிஐடி பரபர தகவல்!
- Sports
வாழ்வா? சாவா? போட்டியில் ரிஸ்க்.. டாஸில் ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவு.. இந்திய அணி ஜெயிக்குமா??
- Automobiles
பெண் செய்த காரியத்தால் நொறுங்கிய கடை! இதனால கூட விபத்து நடக்குமா! சுத்தி இருந்த எல்லாரும் ஆடி போயிட்டாங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சோனமுத்தா போச்சா.. RRR அளவுக்கு புரமோஷன் பண்ணாரே ராம் கோபால் வர்மா.. எந்த தியேட்டரும் வாங்கலையாம்!
சென்னை: ராம் கோபால் வர்மாவின் லெஸ்பியன் காதல் காவியம் டேஞ்சரஸ் திரைப்படம் ஏப்ரல் 8ம் தேதி வெளியாக விருந்த நிலையில், ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக ராம் கோபால் வர்மா வருத்தத்துடன் ட்வீட் போட்டுள்ளார்.
சர்ச்சைக்கு பெயர் போன ராம் கோபால் வர்மா இயக்கத்தில் தாராளம் காட்டி நைனா கங்குலி மற்றும் அப்ஸரா ராணி நிர்வாண கோலத்தில் நடித்த படம் தான் டேஞ்சரஸ். தமிழில் காதல் காதல் தான் என்கிற டைட்டிலில் வெளியாக இருந்தது.
ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, டெல்லி என ஏகப்பட்ட இடங்களுக்கு சென்று புரமோஷன் செய்து வந்த நிலையில், அந்த லெஸ்பியன் படத்தை எந்த தியேட்டரும் வாங்க தயாராக இல்லை என்பதால் படம் தியேட்டரில் வெளியாகவில்லை என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெயர் மட்டும் தான்
டேஞ்சரஸ் என பெயர் வைத்து விட்டு படத்தை ரிலீஸ் பண்ணக் கூட முடியாமல் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் தியேட்டர்கள் மட்டும் படத்தை ரிலீஸ் செய்ய மறுப்பதாக கூறிய அவர் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என ட்வீட் போட்டிருந்தார்.

லெஸ்பியன் படம்
நைனா கங்குலி மற்றும் அப்ஸரா ராணி இருவரும் இணைந்து ஓவர் ஆபாசத்துடன் நடித்துள்ள லெஸ்பியன் படத்தை இயக்கி உள்ளார் ராம் கோபால் வர்மா. இதற்கு முன்னதாக சர்ச்சையை கிளப்பும் காட் செக்ஸ் ட்ரூத், கிளைமேக்ஸ், நேக்கட் என ஏகப்பட்ட படங்களை இயக்கி இருந்தார். அந்த படங்களில் அதிக அளவிலான ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

தடை செய்யுங்க
தயாரிப்பாளர் நட்டி குமார் இந்த டேஞ்சரஸ் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தடை விதிக்கக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பல தியேட்டர்களும் படத்தை வாங்க மறுத்து விட்டன. அதிக ஆபாசத்துடன் படத்தை எடுத்து வைத்து விட்டு அதை தியேட்டரில் ரிலீஸ் செய்ய ராம் கோபால் வர்மா தீவிர முயற்சி செய்து வந்தார்.

ராஜமெளலியுடன் கம்பேர்
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்துடன் தனது படத்தை கம்பேர் செய்த இயக்குநர் ராம் கோபால் வர்மா ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் கவர்ச்சி நடிகைகள் நைனா கங்குலி மற்றும் அப்ஸரா ராணியை கம்பேர் செய்து மீம்களை போட்டிருந்தார். இந்நிலையில், இப்படியொரு நிலைமை வந்ததை அறிந்த ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

ரிலீஸ் இல்லை
ஏப்ரல் 8ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ராம் கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஏகப்பட்ட திரையரங்குகள் இந்த படத்தை வாங்க மறுத்து விட்டன. இதனால், படம் நாளை வெளியாகாது என அதிகாரப்பூர்வமாக இயக்குநர் ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

ஓடிடி ரிலீஸ்
நேக்கட் படத்தை ஓடிடியில் வெளியிட்டதை போல டேஞ்சரஸ் படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் பண்ணலாமே என ராம் கோபால் வர்மா ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த படத்தை எப்படியாவது தியேட்டரில் ரிலீஸ் செய்தாக வேண்டும் என தீவிர முயற்சியில் இருக்கும் ராம் கோபால் வர்மா இது தொடர்பாக என்ன முடிவெடுப்பார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.