»   »  சுதீப்பை பாராட்டி ரஜினியை மட்டம் தட்டி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா!

சுதீப்பை பாராட்டி ரஜினியை மட்டம் தட்டி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா, சுதீப்பைப் பாராட்டி ரஜினியை மட்டம் தட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் பதிவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதில் வல்லவர்.

அதிலும் குறிப்பாக ரஜினியைக் குறித்து அவரது பதிவுகள் முக்கியமானவை.

சர்ச்சை நாயகன்..

சர்ச்சை நாயகன்..

வீரப்பன் ரஜினியைக் கடத்த முயன்றார் என்பது முதற்கொண்டு, ரஜினியையும் அமிதாப்பையும் ஒப்பிட்டது உள்பட பல்வேறு சர்ச்சை டிவிட்டுகளை அவர் வெளியிட்டுள்ளார். ரஜினி ரசிகர்களும் விடாமல் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சுதீப்பிற்கு பாராட்டு...

சுதீப்பிற்கு பாராட்டு...

இந்நிலையில் தற்போது கன்னட நடிகர் சுதீப்புடன் ரஜினியை ஒப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவுகளால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதாவது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப் நடித்து சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் கோட்டிபாபா2. இப்படம் தமிழில் முடிஞ்சா இவன பிடி என்ற தலைப்பில் வெளியானது. கோட்டிபாபா2 கன்னடத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

ரஜினி சுதீப்...

இந்தப் படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அதில் சுதீப்பைப் பாராட்டி அவர் வெளியிட்டிருந்த பதிவில், "கோட்டிபாபா 2 படம் பார்த்தேன். உங்கள் பெயரை கிச்சா சுதீப் என்பதை மாற்றி ரஜினி சுதீப் என்று மாற்றிக்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

பன்முகத்திறமை...

மேலும், "ரஜினி ஒரே மாதிரியான வேடங்களில்தான் நடிப்பார். ஆனால், நீங்கள் ஆட்டோகிராப், ஈகா மற்றும் கோட்டிபாபா-2 ஆகிய படங்களில், உங்களின் பன்முகத்திறமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

விஷ்ணுவர்தன்...

கோட்டிபாபா 2 படத்தில் உங்கள் நடிப்பை காணும்போது, நடிகர் விஷ்ணுவர்தன் சிறியதாய் தெரிகிறார். இதை அவரின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனில் அவர்களும் கத்துக்குட்டிதான்.

ரஜினியால் முடியாது...

தூங்கிக் கொண்டே உங்களால் ரோபா மாதிரியான படங்களில் நடிக்க முடியும். ஆனால், ரஜினியால் ஈகா மாதிரியான படங்களை கனவிலும் செய்ய முடியாது" எனத் தெரிவித்திருந்தார்.

சுதாரித்த சுதீப்...

முதலில் தன்னைப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்த சுதீப். பின்பு சுதாரித்துப் பதில் அளித்துள்ளார். அதில், "உங்களின் பாராட்டுக்கு நன்றி. ஆனால், விஷ்னுவர்தன் மற்றும் ரஜினி ஆகியோரின் அருகில் கூட என்னால் நெருங்க முடியாது. அவர்களை போன்ற பெரிய கலைஞர்களுடன் என்னை ஓப்பிடாதீர்கள்" என பதிலடி கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் கோபம்...

ரசிகர்கள் கோபம்...

ஆனால், ராம்கோபால் வர்மாவின் இந்தப் பதிவுகள் ரஜினி மற்றும் விஷ்ணுவர்தன் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவர்கள் ராம்கோபால் வர்மாவை விமர்சித்து தங்களது பதிவுகளை வெளியிட்டு அருகின்றனர்.

English summary
While praising Kannada actor Kiccha Sudeep for his recent hit Kotigobba 2, Ram Gopal Varma compared actor Kiccha with Rajinikanth as saying, "I just saw kotigobba 2 and I honestly think u shud change ur name from Kiccha Sudeepa to Rajni Sudeepa."
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil