»   »  ராம் ரஹீமுக்கு தண்டனை கிடைத்ததை சைனீஸ் உணவு சாப்பிட்டு கொண்டாடிய நடிகர்

ராம் ரஹீமுக்கு தண்டனை கிடைத்ததை சைனீஸ் உணவு சாப்பிட்டு கொண்டாடிய நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு தண்டனை கிடைத்துள்ள நேரத்தில் சீன உணவகத்திற்கு சென்று எம்.எஸ்.ஜி. இல்லாமல் சாப்பிட்டு கொண்டாடியுள்ளார் காமெடி நடிகர் கிக்கு சார்தா.

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடி செய்து பிரபலமானவர் கிக்கு சார்தா. அவர் நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் சிங் போன்று மிமிக்ரி செய்தார்.

அதை பார்த்த சாமியாரின் ஆட்கள் கோபம் அடைந்தனர்.

கைது

கைது

ராம் ரஹீம் சிங் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு கிக்கு சார்தாவை கைது செய்ய வைத்தனர். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ட்விங்கிள் கன்னா

ட்விங்கிள் கன்னா

ராம் ரஹீமூக்கு தண்டனை கிடைத்ததும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவியும், நடிகையுமான ட்விங்கிள் கன்னா தனது பிளாக்கில் கூறியிருந்ததாவது, மிமிக்ரி செய்ததால் சிறைக்கு சென்ற கிக்கு சார்தா அருகில் உள்ள சீன உணவகத்திற்கு சென்று பீர் ஆர்டர் செய்து, என் சிக்கினில் எம்.எஸ்.ஜி.(மோனோசோடியம் க்ளூட்டமேட்) வேண்டாம் என்று கூறி கொண்டாட வேண்டும் என்றார்.

கொண்டாட்டம்

ட்விங்கிள் சொன்னபடியே நேற்றே சீன உணவகத்திற்கு சென்று எம்.எஸ்.ஜி. இல்லாத உணவை ஆர்டர் செய்து தனது மனைவியுடன் சந்தோஷத்தை கொண்டாடியுள்ளார் கிக்கு சார்தா. ராம் ரஹீம் சிங் நடித்த படத்தின் தலைப்பு எம்.எஸ்.ஜி. என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு

கிக்கு சார்தா தனது மனைவியுடன் சீன உணவகத்திற்கு சென்ற செய்தி அறிந்த ட்விங்கிள் கன்னா தனக்கே உரிய ஸ்டைலில் ட்விட்டரில் பதில் போட்டுள்ளார்.

Read more about: twinkle khanna, actor
English summary
Comedian Kiku Sharda celebrated Ram Rahim Singh's sentence by eating at a Chinese restaurant without MSG.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil