Don't Miss!
- News
உச்சநீதிமன்றத்தில் புதியதாக 5 நீதிபதிகள் பதவியேற்பு..யார் யார்? முழு விவரம் இதோ
- Automobiles
நடிகர்கள், அரசியல்வாதிகள்னு போட்டி போட்டு வாங்குறாங்க... ரேஞ்ஜ் ரோவர் காருக்கு இப்பவே விற்பனை நிறுத்தம்!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சந்தோஷமா இருக்கவே பூமிக்கு அனுப்பப்பட்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் வீட்டில் சும்மாவே தூங்கி முழித்த ராம்... 60 நாள் சம்பளம் இத்தனை லட்சமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை 8 பேர் வெளியேறி இருந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் கிரிக்கெட் வீரர் ராம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டுள்ளார்.
பிக்
பாஸ்
வீட்டின்
கபட
நாடக
வேடதாரி
இவர்கள்
தான்...
விக்ரமன்,
ரச்சிதா
முகத்திரையை
கிழித்த
கமல்

பிக் பாஸ் இந்த வாரம்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, 60 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இருந்து இதுவரை ஜிபி முத்து, அசல் கோளாறு, நிவாஷினி உள்ளிட்ட 8 பேர் வெளியேறிவிட்டனர். இதனையடுத்து இந்த வாரம் 2 பேர் எவிக்சன் என கமல் ஏற்கனவே அறிவித்துவிட்டதால் முடிவை தெரிந்துகொள்ள ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதேநேரம் ராம், ஆயிஷா இருவருமே எவிக்சன் லிஸ்ட்டில் டாப்பில் இருந்தனர்.

எவிக்சனான ராம்
ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் நடத்தப்படும் டாஸ்க்கில், ஹவுஸ்மேட்ஸ்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுவது வழக்கம். ஆனால், இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவருமே தனித்தனியாக விளையாடினர். அதில், யார் சிறப்பாக விளையாடினார்கள் என ஏற்கனவே ஹவுஸ்மேட்ஸ்கள் வாக்கெடுப்பு நடத்திவிட்டாலும், நேற்று அகம் டிவி வழியே பேசிய கமல், மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பு நடத்தினார். அதில், கதிர், தனலட்சுமி, அமுதவாணன் ஆகியோருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் ராம் சிறப்பாக விளையாடினார் என்றும் கமெண்ட்ஸ் வந்தன. ஆனாலும், இதற்கு பலனில்லாமல் ராம் எவிக்சன் ஆனார்.

ராம் வாங்கிய சம்பளம்
இந்த வாரம் 2 எவிக்சன் என்பதால், நேற்றே ராம் வெளியேறுவதாக கமல் அறிவித்தார். முன்னதாக இந்த லிஸ்ட்டில் ராமுடன் ஏடிகே, ஜனனி, ஆயிஷா ஆகியோரும் போட்டியில் இருந்தனர். இறுதியாக குறைந்த வாக்குகளுடன் ராம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ராம் வெளியே செல்லும் போது ஷிவின் கதறி அழுததை பிக் பாஸ் வளைத்து வளைத்து ஜூம் செய்து காட்டினார். வெளியேறிய ராமிடம் பேசிய கமல், "இந்த வாரம் ரொம்பவே துடிப்பாக விளையாடிய நீங்கள், இதை முதலில் இருந்தே செய்திருக்க வேண்டும்" என்றார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராமுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா இத்தனை லட்சமா?
அப்போது கமலுக்கு பதிலளித்த ராம், "நான் எப்பவுமே ரிசர்வ் டைப் தான், அதனால பிக் பாஸ் வீட்டில் முதல் மூன்று வாரங்களுக்கு என்னால் சரியாக விளையாட முடியவில்லை. ஆனாலும், இது எனக்கு நல்ல அனுபவம்" என்றார். இதனையடுத்து 62 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ராமுக்கு மொத்தம் 12 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரரான ராம் பிக் பாஸ் வீட்டில் எப்போதும் தூங்கிக் கொண்டே இருந்தார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் அதிகநேரம் தூங்கியதையே வேலையாக வைத்திருந்த ராமுக்கு 12 லட்சம் சம்பளமா எனவும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர்.