»   »  பரியேறும் பெருமாள்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்திய இயக்குநர் ராம்

பரியேறும் பெருமாள்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்திய இயக்குநர் ராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் 'பரியேறும் பெருமாள்'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டார் இயக்குநர் ராம். அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட செய்தி அடுத்த பாராவில் தொடங்குகிறது...

"2006ல் கற்றது தமிழ் அலுவலகத்தில் ஒரு நல் இரவில் செல்வம் எங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தான். என் அகம் புறம் என எல்லாம் தெரிந்த என் தோழமை அவன். என் முதல் மகன் அவன். அவனுடய 12 வருட உழைப்பின் பொறுமையின் முதல் விளைச்சல் 'பரியேறும் பெருமாள்'. மாபெரும் சபைகளில் உனக்கு மாலைகள் விழ வேண்டும் செல்வம். விழும்.

Ram releases first look of Pariyerum Perumal

அட்டகத்தி தமிழ் திரையுலகம் கண்டிராத மனிதர்களை வெளியை முதன் முதலில் காட்சிப் படுத்திய படம். திரை மொழியில் தனக்கென ஒரு விதத்தை உருவாக்கிக் கொண்ட படம். பா.ரஞ்சித்தை அறிமுகப்படத்திய படம். அட்டகத்தியின் வெற்றியே இன்று நீலம் என்ற தயாரிப்பு நிறுவனமாய். சக படைப்பாளியை அங்கீகரிப்பதும் அவர்களுக்கு தன்னுடைய வெற்றியை இடத்தை பங்கு கொடுப்பதும் பண்பட்ட படைப்பாளிகளால் மட்டுமே முடியும். அப்படியாய்ப்பட்ட ஒரு கலைஞன் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு மாரி செல்வராஜ்ஜின் பரியேறும் பெருமாள். வாழ்த்துக்கள்.


பிரியங்களுடன்,
ராம்."

English summary
Director Ram has released the first look of Pariyerum Perumal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil