»   »  விவேகம் படத்துடன் தரமணியை வெளியிடுவது விவேகமற்ற செயல்: ராம்

விவேகம் படத்துடன் தரமணியை வெளியிடுவது விவேகமற்ற செயல்: ராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்துடன் தரமணியை ரிலீஸ் செய்வது விவேகமற்ற செயல் என்று கூறியதாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த தரமணி படம் கடந்த 11ம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

தரமணி சக்சஸ் மீட்டில் பேசிய ராம் கூறியதாவது,

2007

2007

2007ம் ஆண்டு முதல் படம் பண்ணினேன். ஆன்ட்ரியாவும் 2007ம் ஆண்டில் தான் முதல் படம் பண்ணினார். நிறைய பேருக்கு பத்து வருஷம் முடிந்திருக்கு.

முதல் முதலாக

முதல் முதலாக

10 வருஷத்தில் வினியோகஸ்தர்கள், தியேட்டர் ஆபரேட்டர்கள், உரிமையாளர்களுக்கு போன் பண்ணி, தியேட்டருக்கு ஆடியன்ஸ் வராங்க, கைதட்டுறாங்க, படம் ஓடும் என்று கேட்டது இது தான் முதல் தடவை.

ஓகே கண்மணி

ஓகே கண்மணி

3 வருடம் 8 மாதம் ஒரு படத்தை தாங்கிப் பிடித்தோம். ஓகே கண்மணி வந்தபோது எங்களுக்கு டென்ஷனாச்சு. லிவ் இன் முறை பற்றி அந்த படத்தில் கூறியிருந்தனர்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

படத்தை துவங்கும்போது வாட்ஸ்ஆப் இல்லை. முதல் ஷெட்யூல் முடிந்த பிறகே வாட்ஸ் ஆப் வந்தது. தரமணி படத்தை ரிலீஸ் செய்ய போராடிக் கொண்டிருந்தோம். அப்போது அண்டாவ காணோம் இசை வெளியீட்டு விழாவில் தரமணி ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸ் என்று தயாரிப்பாளர் ஜேஎஸ்கே அறிவித்தது எனக்கு பயங்கர கோபம் ஆகிவிட்டது.

விவேகம்

விவேகம்

விவேகம் வரும் போது நம் படத்தை ரிலீஸ் செய்வது எவ்வளவு விவேகம் அற்ற செயல் என்பதை அவரிடம் கூறினேன். இரண்டு, மூன்று நாட்கள் குழப்பத்தில் இருந்தேன். அப்போது ஆன்ட்ரியா சொன்னாங்க, அந்த படம் வேற நம்ம படம் வேற. படம் ரிலீஸாகட்டும் சார் அதுபோதும் அதுவே வெற்றி என்றார்.

English summary
Director Ram said that he told Taramani producer JSK it was not a good decision to release their movie along with Vivegam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil