»   »  சிவா vs சந்தானம்: ரம்ஜான் மோதலில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யார்?

சிவா vs சந்தானம்: ரம்ஜான் மோதலில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி 'தில்லுக்கு துட்டு', 'அட்ரா மச்சான் விசிலு' என 2 தமிழ்ப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் படங்கள் இல்லாமல் இந்த வாரம் 2 சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகி இருக்கின்றன.

காமெடி, ஹாரர் என்ற வகையில் இன்று வெளியாகியிருக்கும் இப்படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

அட்ரா மச்சான் விசிலு

மிர்ச்சி சிவா- பவர் ஸ்டார் சீனிவாசன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம் 'அட்ரா மச்சான் விசிலு'. சிவா ரசிகராகவும், பவர் ஸ்டார் நடிகராகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுக்க காமெடிப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் பவர் ஸ்டார் வில்லத்தனம் கலந்து நடித்திருக்கிறாராம்.பவர் ஸ்டாரின் வில்லத்தனமும், சிவாவின் காமெடியும் படத்திற்கு எந்தளவிற்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.

Ramadan Special Dhilluku Dhuddu, Adra Machan Visilu

தில்லுக்கு துட்டு

பேய்களை நாயகன் கலாய்ப்பது போல 'லொள்ளு சபா' ராம்பாலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் எந்தவித சிக்கலுமின்றி 'தில்லுக்கு துட்டு' இன்று வெளியாகி இருக்கிறது. 'தில்லுக்கு துட்டு' சந்தானத்தின் ஹீரோ ஆசைக்கு கைகொடுத்தால் சரிதான்.

Ramadan Special Dhilluku Dhuddu, Adra Machan Visilu

பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இன்று வெளியாகவிருந்த மாகாபா ஆனந்தின் 'அட்டி' திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

English summary
Today Released Movies Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil