உங்களுக்கு வேணும்னா அது மாடா இருக்கலாம் எங்களுக்கு அது பிள்ளை .. குன்னிமுத்து வீராயி கதறல்

சென்னை : நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ளது இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.

அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.

கிராமத்து கதை களத்தில் தொலைந்து போனா மாட்டை கண்டுபிடிக்க போராடும் தம்பதியின் வாழ்க்கையைக் கூறும் இந்த படம் இப்பொழுது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்பொழுது இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்ற படத்தை தயாரித்துள்ளது அறிமுக இயக்குனர் அரிசியில் மூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.

அசட்டுத்தனமான நடிப்பை

அசட்டுத்தனமான நடிப்பை

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகியுள்ளார் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் மிதுன் மாணிக்கம் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கிராமத்தில் வாழும் தம்பதிகளாக மிக இயல்பாக நடித்துள்ளனர். அசட்டுத்தனமான நடிப்பை ரம்யா பாண்டியனும் வெகுளித்தனமான நடிப்பை மிதுன் மாணிக்கமும் வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளனர்.

மாட்டை தொலைத்த தம்பதி

மாட்டை தொலைத்த தம்பதி

அழகிய கிராமத்தில் எளிமையான தம்பதிகளாக வாழ்ந்து வரும் ரம்யா பாண்டியன் மற்றும் மிதுன் மாணிக்கம் செல்லமாக வளர்த்து வரும் கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு மாடுகள் ஒரு கட்டத்தில் காணாமல் போக அதை கண்டுபிடிக்க முடியாமல் காவல் நிலையத்தை அணுகுகின்றனர். அங்கு மாடு தொலைந்து போன வழக்கை ஏற்க மறுக்கும் காவல்துறை மற்றும் மாட்டை தொலைத்த தம்பதிக்கு இடையே நடக்கும் ஒரு உணர்வுபூர்வமான படமாக இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் வெளியாகி உள்ளது. மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் ஆகியோர் வேடத்தில் தோன்றும் காட்சிகளில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.உங்களுக்கு வேணும்னா அது மாடா இருக்கலாம் எங்களுக்கு அது பிள்ளை என்று கதாநாயகன் மிதுன் (குன்னிமுத்து) மற்றும் ரம்யா பாண்டியன் (வீராயி) சொல்லும் போது மிகப்பெரிய மன அழுத்தம் ஏற்படுகிறது .

சூர்யாவின் வாழ்த்துக்கள்

சூர்யாவின் வாழ்த்துக்கள்

சூர்யாவின் தயாரிப்பில் Amazon Prime Video-இல் பிரத்யேகமாக வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தை அவர் கண்டு ரசித்தார். சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள தமிழ் சமூக நையாண்டியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாளும் (RARA) Amazon Prime Video-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. பார்வையாளர்களிடமிருந்து அவர் பெற்ற அன்பு மற்றும் ஆதரவால் நெகிழ்ந்த சூர்யா RARA-வை Amazon Prime Video-இல் காணும் படத்தை தனது சமூக ஊடக தளத்தில் பகிர்ந்து கொண்டார். இத்திரைப்படம் ஸ்ட்ரீமிங் சேவைக்காக D2 என்டர்டெயின்மென்ட் தயாரித்த நான்கு படங்களில் முதல் படம் ஆகும். அது மட்டும் அல்லாமல் சூர்யா குறிப்பிட்டு எழுதியது: "This Gem filled our hearts, hoping it will fill your's too!! I'm proud of the energy & effort our new team has put in!! RARA is out now on PrimeVideoIN" என்று சொல்லி உள்ளார்

ரசிகர்களின் பாராட்டு

ரசிகர்களின் பாராட்டு

மேலும் இதில் நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் ரிப்போர்ட்டராக நடித்துள்ளார். செல்லமாக வளர்த்த மாட்டை பறிகொடுத்த தவிப்பில் இருக்கும் தம்பதியருக்கு அதனை கண்டுபிடித்து தர பெரும் உதவியாக இருக்கும் வாணி போஜன் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இதில் இடம் பெறும் அரசியல் வசனங்களும் ஆணித்தரமாக பதிந்துள்ளது . இவரை பாடகராக அனைவருக்கும் அறிமுகமாகியிருந்த க்ரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X