»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தன்னுடைய சம்பள பாக்கியைத் தரும் வரை விஜய்காந்தின் "ரமணா" படம் ரிலீசாவதை நிறுத்தி வைக்க வேண்டும்என்று அப்படத்தின் கதாநாயகி ஆஷிமா பல்லா வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜயகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும்தீபாவளிக்கு ரிலீசாகவும் "ரமணா" தயாராக உள்ளது. சிம்ரனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் சிரஞ்சீவி- சிம்ரன்- ஆஷிமா பல்லா நடித்து சக்கைபோடு போட்டு வரும் டாடி படத்தைத் தான்ரமணாவாக தமிழில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பெருநகர 6வது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஆஷிமா தன் மனுவில்,

"ரமணா" படத்திற்காக ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தினர் கடந்த ஏப்ரல் 4ம் தேதி என்னை ஒப்பந்தம் செய்தனர்.எனக்கு ரூ.10 லட்சம் சம்பளம் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

படம் ரிலீசாவதற்கு முன்பாகவே முழு சம்பளத் தொகையையும் எனக்குத் தருவதென்று ஒப்பந்தத்தில்தெரிவிக்கப்பட்டு, அட்வான்ஸ் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

பின்னர் மே 1ம் தேதி ரூ.2 லட்சமும், ஜூன் 1ம் தேதி ரூ.2 லட்சமும், அதே மாதம் 6ம் தேதி ரூ.1 லட்சமும்தரப்பட்டன. ஆக இதுவரை மொத்தம் ரூ.6 லட்சம் பெற்றுள்ளேன்.

இன்னும் எனக்கு ரூ.4 லட்சம் சம்பளம் தரப்பட வேண்டிய நிலையில் கடந்த ஆகஸ்டு 17ம் தேதி படப்பிடிப்புகள்முடிவடைந்து விட்டன. ஆடியோ கேசட்டுகளும் வெளியாகிவிட்டன.

இந்நிலையில் வரும் தீபாவளிக்கு "ரமணா" படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் என்னுடைய சம்பளப்பாக்கியை வழங்காமல் படத்தை வெளியிட்டால் எனக்கு கடுமையான நஷ்டம் ஏற்படும்.

எனவே என்னுடைய சம்பளப் பாக்கியான ரூ.4 லட்சத்தைக் கொடுக்காமல் "ரமணா" படம் வெளியிடுவதைஅனுமதிக்கக் கூடாது.

மேலும் இந்தத் தொகையை 24 சதவீத வட்டியுடன் தருமாறும் நீதிமன்றம் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தாருக்குநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் ஆஷிமா கூறியுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக வரும் 31ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவன அதிபர்ரவிச்சந்திரனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தப் படத்தின் கதாநாயகனான விஜயகாந்த், தன்னுடைய "ராஜ்ஜியம்" படத்திற்கான சம்பளத் தொகையை"செட்டில்" செய்யாததால் அப்படத்தின் தயாரிப்பாளரான மனோஜ்குமார் தயாரித்துள்ள "ஐ லவ் யூ டா" படத்தைரிலீசாக விடாமல் தடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதற்கெடுத்தாலும் மூச்சுவிடாமல் வசனம் பேசும் விஜய்காந்த் தன்னுடன் நடந்த ஆஷிமாவுக்கு பணத்தை செட்டில்செய்யுமாறு ஆஸ்கர் பிலிம்ஸ்சிடம் பேசவேயில்லை. தன் பணம் வந்துவிட்டதால் அமைதியாவிட்டார்.

உங்களுக்கு ஒரு நியாயம்.. அடுத்தவருக்கு ஒரு நியாயமா விஜய்காந்த்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil