Don't Miss!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- News
குடியரசுத் தலைவர் உரையில் "காசி தமிழ் சங்கமம்".. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராமராஜன் எனக்காக செம அடி வாங்குனாரு... காதலுக்காக நளினி செய்த காரியம்!
சென்னை: 1980-களில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி
1987ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
நளினியை காதலித்ததற்காக அவரது பெற்றோரிடம் ராமராஜன் செம அடி வாங்கியதாக நளினி அதிர்ச்சித் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்
ஆலியா
பட்,
ரன்பீர்
திருமணம்..பிரபலங்கள்
என்னென்ன
கிஃப்ட்
கொடுத்தாங்க
தெரியுமா?
வாய்பிளந்த
ரசிகர்கள்!

கிராமத்து கதைகளில்
தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90களில் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன். பொதுவாக கிராமத்து கதைகளில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வசீகரித்த ராமராஜன் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் பின் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்த நிலையில் அதைத் தொடர்ந்து ராமராஜன் நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன்,ராசாவே உன்ன நம்பி, ரயிலுக்கு நேரமாச்சு,எங்க ஊரு
காவல்காரன், கரகாட்டக்காரன் என ராம்ராஜன் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டது

நளினியின் எதார்த்த நடிப்பு
1980களில் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை நளினி. தமிழில் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நளினியின் எதார்த்த நடிப்பில் வெளியான உயிருள்ளவரை உஷா, சரணாலயம், தங்கைக்கோர் கீதம்,நான் பாடும் பாடல், மனைவி சொல்லே மந்திரம்,நூறாவது நாள், வீட்டுக்கு ஒரு கண்ணகி என எண்ணற்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் இவர் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன. சிறந்த நடிகையாக பல முறை விருது பெற்ற நளினி நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதலை நளினியிடம் வெளிப்படுத்தியுள்ளார்
உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த ராமராஜன் ஹீரோவாக நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் ஒப்பந்தமான உடனே ஒய் எம் சி ஏ -வில் படப்பிடிப்பில் இருந்த நளினியை பார்த்து இந்த செய்தியைக் கூற வந்துள்ளார். நான் உதவி இயக்குனராக இருப்பதால் தான் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள யோசிக்கின்றீர்கள். இப்போது நான் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளேன். என தனது காதலை நளினியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமராஜன் செம அடி வாங்குனாரு
அதை நளினியுடன் வந்த நபர் பார்த்துவிட்டு அவரது வீட்டில் கூறியுள்ளார். இந்த நிலையில் நளினி வீட்டார் ராமராஜனை ஒய்எம்சிஏ-வில் செம அடி அடித்துள்ளனர். ராமராஜன் அடி வாங்குவதை பார்த்த நளினி சினிமாவில் வருவது போல ராமராஜனை கட்டிப்பிடித்து அடியை தன் மீது வாங்கிக் கொண்டார். அதன்பிறகு 1987 ஆம் ஆண்டு இரு வீட்டாருக்கும் தெரியாமல் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். காதலுக்காக ஒய்எம்சிஏ- வில் ராமராஜன் அடி வாங்கிய அதிர்ச்சித் தகவலை நளினி பகிர்ந்துள்ளார்.