»   »  காது கருகுகிற மாதிரி சசி அணியை மக்கள் திட்டுகிறார்கள் - ராமராஜன்

காது கருகுகிற மாதிரி சசி அணியை மக்கள் திட்டுகிறார்கள் - ராமராஜன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் என்ற மூன்றெழுத்துக்கு புது விளக்கம் தந்திருக்கிறார் மாஜி ஹீரோ ராமராஜன்.

தமிழ் நாட்டு அரசியலில் ஒரே வாரத்தில் காட்சிகள் தலை கீழாக மாறி வருகின்றன. முதல்வர் பன்னீர் செல்வத்துக்குத்தான் மத்திய அரசின் ஆதரவு என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டதால், ஒவ்வொரு எம்எல்ஏ, எம்பிகளாக சசிகலா கூட்டத்திலிருந்து பன்னீர் பக்கம் தாவிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நாங்க மட்டும் சளைத்தவர்களா என்று கூறிக் கொண்டு சினிமா நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் பன்னீர் கேம்புக்கு வந்து கொண்டுள்ளனர்.

இன்று நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் (முன்னாள் எம்.எல்.ஏ.) உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய நடிகர் ராமராஜன், "புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசியான முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்குதான் மக்களின் ஏகோபித்த ஆதரவு உள்ளது. அவர் 4-வது முறைமட்டுமல்ல 5-வது முறையும் அவர்தான் முதல்வர் ஆவார்.

முன்பெல்லாம் அரசியலில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. அரசியலை எப்படி நடத்த வேண்டும் என்று இன்று மக்களுக்கு தெரிகிறது. மக்கள்அதை வெளிப்படுத்துகிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதற்கிணங்க மக்கள் விரும்பும் முதல்வர் ஓ.பி.எஸ்தான். ஓபிஎஸ் என்றால் ஓயாமல் பொறுப்புடன் செயல்படுபவர் என்று அர்த்தம்.

இன்று மக்களால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வரும் ஓ.பி.எஸ். தான் மிகவும் எளிமையானவர். சிறந்த உழைப்பாளி. அனைவரிடமும் எளிமையாக பழகும் பண்பு கொண்டவர். எனது அருகே அவர் இடித்துக் கொண்டுதான் நெருக்கமாக நிற்கிறார்.

இதேபோல் எந்த முதல்வராவது நிற்பதைப் பார்த்து இருக்கிறீர்களா? அவருக்கு பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்தரப்பினர் கொடுத்தார்கள். அந்த சூழ்ச்சிகளை சுருட்டிக்கொண்டு சுனாமியாக வந்தார்.

நான் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் மனநிலை என்ன என்பதை எண்ணிப்பாருங்கள். நான் பல்வேறு தலைவர்களுக்கு, நடிகர்களுக்கு போஸ்டர் ஒட்டி இருக்கிறேன்.

ஆனால் இன்று மக்களே முன்வந்து ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகிறார்கள். அதுதான் மக்கள் புரட்சி. நாங்கள் படத்தில்தான் கதாநாயகன். ஆனால் இன்று சமூகவலை தளங்கள், ஊடகங்கள், பத்திரிகைகள், வாட்ஸ்அப், டுவிட்டர்கள் மூலம் கதாநாயகனாக திகழ்கிறார் ஓ.பி.எஸ்.

வடிவேல் சொல்வதுபோல் காது கருகுகிற மாதிரி எதிரணியினரை மக்கள் திட்டுகிறார்கள்," என்றார்.

English summary
Actor Ramarajan has gave a new meaning to OPS
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil