»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ராமராஜன் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற வேண்டுமானால் நீதிமன்ற உத்தரவுப்படி ரூ 10லட்சத்தை தனது குழந்தைகள் பெயரில் வரும் 8 நாட்களுக்குள் டெபாசிட் செய்ய வில்லையென்றால் அவருக்குவிவாகரத்து கிடைப்பதில் காலதாமதமாகும் என்று தெரிகிறது.

பிரபல நடிகை நளினிக்கும், நடிகர் ராமராஜனுக்கும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதல்ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளமுடிவெடுத்தனர். இதன் படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாரத்து கோரிமனு செய்தனர். அப்போது ராமராஜன் தன் குழந்தைகள் பேரில் ரூ 10 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார்.

நீதிபதி அதற்கு 6 மாத கால அவகாசம் கொடுத்தார். அந்த 6 மாத கால அவகாசம் இந்த மாதம் 18-ம் தேதியுடன்முடிவடைகிறது. நளினி ராமராஜன் விவாரத்து வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்ததாவது:

குழந்தைகள் பெயரில் பணம் டெபாசிட் செய்து விட்டு அதன பிறகு 6 மாத காலம் கழித்து இருவரும் சேர்ந்து வந்துவிவாகரத்து கோர வேண்டும். நீதிமன்றம் விசாரணை செய்து விவாகரத்து வழங்கும் என கூறியிருந்தார்.

இப்போது ராமராஜன் ஒப்புக் கொண்டபடி பணம் செலுத்ததால் விவாகரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்துநளினி, ராமராஜன் ஆகியோருடைய வழங்கறிஞர்கள் கூறுகையில், ராமராஜன் குழந்தைகள் பெயரில் பணம்டெபாசிட் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு ராமராஜன் மனு செய்தால் நீதிபதி கால அவகாசத்தை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவாகரத்துகால தாமதமாகும். இந்த மாதம் 18-ம் தேதி முடிவு தெரிந்து விடும் என கூறினர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil