»   »  பணம் வாங்கிவிட்டு ஆட மறுத்த ரம்பா

பணம் வாங்கிவிட்டு ஆட மறுத்த ரம்பா

Subscribe to Oneindia Tamil

கோவையில் உள்ள பிரபல நகைக் கடை ஆண்டு விழாவில் நடனமாட வருவதாகக் கூறி விட்டு வராமல் போனநடிகை ரம்பா மீது வழக்குத் தொடரப் போவதாக நகைக் கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

கோவையில் உள்ளது பவழம் ஜூவல்லர்ஸ். பிரபலமான நகைக் கடையான இதன் ஆண்டு விழா கோவையில்நடந்தது. இதில் கலந்து கொள்ள நடிகை ரம்பா அழைக்கப்பட்டிருந்தார். திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்மூலம், நடிகை ரம்பாவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கடை உரிமையாளர்கள் அழைத்திருந்தனர்.

இதற்காக அட்வான்சும் தரப்பட்டது.

நிகழ்ச்சிக்காக ரம்பாவும் கோவைக்கு வந்திருந்தார். இந் நிலையில் திடீரென கோவை போலீஸில் ரம்பா புகார்கொடுத்தார்.

அதில், நகைக் கடை ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவே தன்னை ஆர்.வி.உதயக்குமார் அழைத்ததாகவும்,ஆனால் இங்கு வந்த பின்னர் மேடையில் நடனமாடுமாறு அவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்தியதாகவும், எனவேஅவர்களால் பிரச்சினை ஏற்படும் என்பதால் பாதுகாப்பு தருமாறும் அவர் கூறியிருந்தார்.

ரம்பாவின் புகாரையடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பவழம்ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ராதாகிருஷ்ணன் இந்தப் புகாரை மறுத்துள்ளார். நடனமாடத்தான் ரம்பாவைரூ.75,000 பணம் கொடுத்து அழைத்திருந்தோம். ஆனால் இங்கு வந்த பின் ரூ.3 லட்சம் கேட்டு அவர்வற்புறுத்தினார்.

பின்னர் ரூ.1 லட்சத்திற்கு ஒத்துக் கொண்டு அதையும் உடனே பணமாகத் தரவேண்டும் என்று கூறினார். அதற்குநாங்கள் மறுத்ததால், விழாவுக்கு அவர் வரவில்லை. இதனால் எங்களுக்கு ஏராளமான பணம் நஷ்டமாகி விட்டது.வருவதாக உறுதியளித்து விட்டு கடைசியில் வராமல் போனதால் எங்களது நகைக் கடையின் பெயர் கெட்டுவிட்டது.

எனவே ரம்பா மீது வழக்குத் தொடரலாம் என்றுள்ளோம். இது தொடர்பாக வழக்கறிஞர்களின் ஆலோசனையைப்பெற்று நடவடிக்கை எடுப்போம் என்றார் அவர்.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குத்துவிளக்கேற்றத்தான் கூப்பிட்டார்கள்: ரம்பா

இந் நிலையில் ரம்பா கோவை ரெசிடென்சி ஹோட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், என்னை விழாவில்குத்துவிளக்கு ஏற்றத்தான் கூப்பிட்டார்கள். இங்கு வந்து நடனம் ஆடு என்றார்கள். அதற்கான ஏற்பாட்டுடன்வராததால் நான் மறுத்தேன்.

உதயக்குமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஒரு நடனம்தானே ஆடிவிட்டுப் போங்கள் என்றுகட்டளையிடும் பாணியில் கூறினார். அதன்பிறகு நடனம் ஆடமுடியாமல் கோவையை விட்டு செல்ல முடியாதுஎன்று அவர்கள் மிரட்டியதால்தான் நான் போலீஸூக்கு செல்ல நேர்ந்தது.

இதை எதிர்பார்க்காத அவர்கள் பின்னர் என்னிடம் சமாதானத்திற்கு வந்தார்கள். நான் மறுத்துவிட்டேன். நடிகைஎன்றால் பணத்திற்காக ஆடுபவள் தானே என்று மட்டமாக நினைக்கிறார்கள். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவிடம்செல்லக் கூட நான் தயங்கமாட்டேன் என்றார்.

ரம்பாவோடு சம்பந்தமில்லை: உதயக்குமார்

இது குறித்து உதயக்குமார் அளித்த பேட்டியில், இந்த விவகாரத்தில் எனக்கும், ரம்பாவிற்கும் எந்த சம்பந்தமும்இல்லை. விழா நடத்தியவர்கள் ரம்பாவை நடனமாடக் கேட்டார்கள். அதற்கு ரம்பா மறுத்ததால், வெறுமனேகுத்துவிளக்கேற்றினால் போதும் என்றார்கள். அதன் பின்னரும் ரம்பா தேவையில்லாமல் பிரச்சனையைப்பிரச்சனையைப் பெரிதாக்கிவிட்டார் என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil