»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
மலையாளத்தில் நடிக்க ரம்பாவுக்கு தடை விதிக்கப் போகிறார்களாம்.

மலையாளத்தில் அறிமுகமான ரம்பாவுக்கு அந்த மலையாளப் பட உலகமே வில்லனாகி விட்டது. நடிகை ரம்பா மலையாளத்தில்தான் அறிமுகமானார் என்பது பாதி பேருக்கு தெரியாது. ஹரிகரன் என்பவர் டைரக்ட் செய்த "ஸர்கம் என்ற படத்தில் தான்அறிமுகமானார்.

வினீத்துக்கு ஜோடியாக ரம்பா அந்தப் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கேரள அரசின் சிறப்பு விருதுகூட ரம்பாவுக்கு கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தப் படத்திற்கு பிறகு என்ன காரணத்தினாலோ, கால் பதித்த மலையாள மண்ணை ரம்பா திரும்பியே பார்க்கவில்லை. தமிழ்ரசிகர்களுக்கு உள்ளத்தை அள்ளித் தந்த அவர், தெலுங்கு, இந்தி என ஒரு ரவுண்டு அடித்த பிறகு லேசாக மலையாள மண்ணில்எட்டிப் பார்த்தார்.

ரம்பாவை மறக்காத மலையாள சேட்டன்கள் இரு கரமும் கூப்பி அவரை வரவேற்றனர். மம்முட்டி உட்பட பலருடன் அவர்ஜோடியாக நடித்தார். தமிழில் வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் வந்த வரை லாபம் எனக் கருதி மலையாளத்தில் கவனம்செலுத்தி வந்தார்.

சினிமா மட்டுமல்லாது பல மேடை நிகழச்சிகளிலும் கலந்து கொண்டு கல்லாவை நிரப்பத் தொடங்கினார். யார் எங்குகூப்பிட்டாலும் செல்ல இவர் தயாராக இருந்தததால் (நடனமாடத் தான்) கையில் சூட்கேசுகளுடன் பலர் ரம்பாவை மொய்க்கத்தொடங்கினர்.

இந்த நிலைமையில் தான் ரம்பாவுக்கு ஒரு புதிய வடிவில் இப்போது சிக்கல் வந்துள்ளது.

கேரளாவில் சங்கங்களுக்கு மட்டும் எந்தப் பஞ்சமும் கிடையாது. மூடை தூக்குபவர்களில் இருந்து தென்னை ஏறுபவர்களுக்குவரை அங்கு வலிமையான சங்கங்கள் உண்டு.

எதற்கு இந்தக் கதை? ரம்பாவுக்கும் இந்த சங்கங்களுக்கும் என்ன தொடர்பு என்று தானே கேட்கிறீர்கள். அவசரப்படாதீர்கள்.தெருவுக்கு தெரு கேரளாவில் சங்கம் இருப்பது போல நடிகர்களுக்கு "அம்மா என்ற பெயரில் சங்கம் உள்ளது.

இதே போல தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சங்கம் உண்டு. இந்த இரு சங்கங்களுக்கும் இடையே சமீப காலமாக அங்கு பயங்கரமோதல் ஏற்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் டிவி சேனல்கள் நடத்தும் நட்சத்திர கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாதுஎன்று தயாரிப்பாளர்கள் கூறினர்.

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்பது மட்டுமல்ல, டிவி தொடர்களில் கூட நடிக்கக் கூடாது என்றும் தடை விதித்தனர்.

ஆனால் இதற்கு பல நடிகர், நடிகைகள் சம்மதிக்கவில்லை. இதனால் இரு சங்கங்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.எங்களது பேச்சைக் கேட்காவிட்டால் எந்த சூப்பர் நடிகராக இருந்தாலும் அவர்களை வைத்து படம் எடுக்க மாட்டோம் என்றுதயாரிப்பாளர்கள் கூறினர்.

இதன் பிறகே சில நடிகர்கள் வழிக்கு வந்தனர். இதனால் கேரளாவில் டிவி சேனல்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் முக்கியமானநடிகர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை.

இப்படி ஒரு சட்டம் இருக்கும் நிலையில் தான் சமீபத்தில் ஒரு தனியார் டிவி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரம்பா, ஷோபனா, ஷர்மிளிஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் இவர்கள் அனைவருக்கும் மலையாள சினிமாவில் தடை விதிக்க தயாரிப்பாளர்கள்சங்கம் தீர்மானித்துள்ளது.

எனக்கு தடை விதிக்க இவர்கள் யார்? அவர்களை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று தொடையில் தட்டி சவால் விட்டுள்ளாராம்ரம்பா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil