»   »  பிரசாரத்தில் ரம்பா

பிரசாரத்தில் ரம்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவர்ச்சிப் புயல் ரம்பா பிரசாரக் களத்தில் குதித்துள்ளார். பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹைதராபாத்தில் அவர்தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.

பணப் பிரச்சினையில் சிக்கியிருந்த ரம்பா, சென்னைக்கு பிரதமர் வாஜ்பாய் வந்தபோது, விமான நிலையத்தில்வைத்து அவரைப் பார்த்து பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் போவதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திராவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரப்பிரசாரத்தில் ஈடுபடப் போவதாகவும் ரம்பா அறிவித்திருந்தார்.

இந் நிலையில் தனது சொந்த மாநிலமான ஆந்திராவிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் ரம்பா.

ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து ரம்பா பிரசாரம் செய்தார். லால்பேட்பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ரம்பா பேசியதை பாஜக தலைவர்கள் உள்பட தொண்டர்கள் மிகுந்தஆவலுடன் கேட்டனர்.

கோர்வையாக இல்லாவிட்டாலும் கூட, கூட்டிப் பெருக்கி, ரம்பா பேசியதை தொண்டர்கள் ரசிக்கவே செய்தார்கள்.

ஆனால் அடக்க ஒடுக்கமாய் உடையணிந்து ரம்பா வந்ததால் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil