»   »  ரம்பா மீது வழக்கு பதிவு

ரம்பா மீது வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

நகைக் கடை நிறுவன விழாவில் ஆட ஒப்புக் கொண்டு பின்னர் ஆட மறுத்து சென்னை திரும்பிய நடிகை ரம்பாமீது கோவை நீதிமன்ற உத்தரவுப்படி, கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவையில் கடந்த மாதம் 21ம் தேதி பவழம் நகைக் கடையின் ஆண்டு விழா நடந்தது. இதில் நடிகை ரம்பாகலந்து கொண்டு நடனம் ஆடுவதாக அந்த நகைக் கடை விளம்பரம் செய்திருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த நடிகை ரம்பா, நடனம் ஆடச் சொல்லி தன்னை இயக்குநர்ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் வற்புறுத்துவதாகக் கூறி போலீஸில் புகார் கொடுத்தார். பதிலுக்கு ஆட ஒப்புக்கொண்டு பின்னர் ரம்பா மறுத்ததாகக் கூறி நகைக்கடைக்காரர்களும் போலீஸில் புகார் கொடுத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந் நிலையில், கோவை நீதிமன்றத்தில், நகைக் கடை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் எங்களது நகைக் கடை விழாவில் கலந்து கொண்டு நடனமாட ரம்பா வந்திருந்தார்.

அவருக்கு முன் பணமாக ரூ. 50,000 வழங்கப்பட்டது.

ரம்பா, அவரது தாயார், தம்பி ஆகியோர் தங்குவதற்காக நட்சத்திர ஹோட்டலில் அறையும் புக் செய்யப்பட்டது.இதற்காக பெரும் செலவும் செய்தோம்.

ஆனால் திட்டமிட்டபடி, ரம்பா நடனமாட மறுத்து விட்டார்.

அவரை அழைத்து வந்தது தொடர்பாக ரூ. 2 லட்சம் செலவானது.

அவர் மீது மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ரம்பா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை போலீஸாருக்குஉத்தரவிட்டார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil