Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மீண்டும் வந்த ரம்பா.. யானை படத்துக்கு என்ன விமர்சனம் சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை: ரம்பா தொடை என கொஞ்சம் குண்டாக இருக்கும் ஆண் குழந்தைகளை கூட கொஞ்சும் அளவுக்கு 90ஸ் கிட்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் ரம்பா.
"என்னவளே என்னவளே" பாடலில் வருவது போல விஜய் கனவில் மட்டுமின்றி ஏகப்பட்ட இளைஞர்களின் கனவுகளிலும் ரம்பா அப்போது வந்து சென்றார்.
திருமணத்துக்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்ட நடிகை ரம்பா தற்போது சென்னைக்கு மீண்டும் வந்துள்ளார்.
ரசிகர்களை
கவர்ந்த
பிக்பாஸ்
டைட்டில்
வின்னர்..
நெகிழ்ச்சிப்பதிவு..
எதுக்குன்னு
தெரியுமா?

சார் ரம்பா சார்
1992ம் ஆண்டு ஆ ஒக்கட்டி ஆடக்கு எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரம்பா. அதற்கு அடுத்த ஆண்டே பிரபு நடித்த உழவன் படத்தில் கேமியோ ரோலில் தமிழில் நடித்திருந்தார். 1996ம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் அறிமுகமான ரம்பா செங்கோட்டை, சுந்தர புருஷன், அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து கலக்கினார்.

மீனா உடனே இருந்தார்
சார் ரம்பா சார் என பார்த்திபன் சொல்லும் அந்த காமெடி காட்சி இடம்பிடித்த உன்னருகே நானிருந்தால் படத்தில் மீனாவும் ரம்பாவும் இணைந்து நடித்திருப்பார்கள். அன்று முதலே இருவரும் நெருங்கிய தோழிகளாகவே சினிமாவில் வலம் வந்தனர். மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தி கேட்டதுமே மீனா வீட்டுக்கு வந்த ரம்பா கடைசி வரை அவருடனே இருந்தது அவர்கள் இருவரது நட்பை வெளிப்படுத்தியது.

ரம்பாவின் யானை விமர்சனம்
வெள்ளிக்கிழமை வெளியான நடிகர் அருண் விஜய்யின் யானை படத்தை தனது குடும்பத்துடன் பார்த்த நடிகை ரம்பா படம் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடித்துள்ளது எனக் கூறியுள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் ஹரி நல்ல எமோஷனலான படத்தை கொடுத்திருக்கிறார். அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளில் வெறித்தனமாக நடித்திருக்கிறார் என படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார் ரம்பா.

மீண்டும் நடிப்பீங்களா
நடிகை ரம்பாவை பார்த்ததுமே இந்த ஒரு கேள்வி தான் அனைத்து ரசிகர்கள் மனதிலும் எழுந்தது. அதை கேட்ட உடனே நான் சும்மா குடும்பத்துடன் சென்னைக்கு வந்திருக்கேன் அவ்ளோதான். வேற எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை. இப்போ தமிழ் சினிமா வேறலெவலில் முன்னேறி இருக்கு, உலகம் முழுவதும் கோலிவுட் படம் டிரெண்டாகி வருவது பெருமையாக இருக்கு என பேசி உள்ளார்.