»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

டிகை விஜி சாவுக்குக் காரணமாக இருந்த அவரது முன்னாள் காதலர் ரமேஷ் செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நடிகை விஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் டைரக்டர்ரமேஷ் தன்னைக் காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் டைரக்டர் ரமேஷ் திருப்பூரில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார்.

தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு செவ்வாய்கிழமை விசாரணைக்குவந்தது. ரமேஷை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்று தேசிய மகளிர் சங்கத்தலைவி ஒவியம் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஜாமீன் மனு மீதான் விசாரணை நடத்திய நீதிபதி முருகேசன் இயக்குனர் ரமேஷை ஜாமீனில் விடுதலை செய்ய உத்திரவிட்டார்.

Read more about: chennai, cinema, ramesh, tamilnadu, viji

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil