என் மகனுக்கு ஸ்கூல்ல சீட் வாங்கிக் கொடுத்ததே மீனா தான்.. நடிகர் ரமேஷ் கண்ணா உருக்கம்!
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடல் சற்று முன் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு, மன்சூர் அலி கான், பழம்பெரும் நடிகை லக்ஷ்மி, இயக்குநர் சேரன் உள்ளிட்ட பலர் நேரடியாகவே மீனாவின் வீட்டுக்கு வந்து இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
முத்து உள்ளிட்ட படத்தில் மீனாவுடன் இணைந்து நடித்த இயக்குநரும் காமெடி நடிகருமான ரமேஷ் கண்ணாவும் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.

மீனா கணவர் உடல் தகனம்
சென்னை, பெசன்ட் நகர் மயானத்தில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆம்புலன்சில் அவரது திருவுருவ புகைப்படம் மாட்டி உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முன்னணி நடிகர்கள் பலரும் மீனாவின் கணவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

கலங்கிய மீனா
கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவாக இருந்த போதே அவரை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு மிகவும் கஷ்டமான மன நிலையில், இருந்து வந்த நடிகை மீனா எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் தன்னையும் தனது மகள் நைனிகாவையும் இவ்வளவு சீக்கிரமாக விட்டுச் சென்று விட்டாரே என ரொம்பவே கலங்கி போய் விட்டார்.

சோகத்தில் ரஜினி
சிறு வயது முதலே நடிகை மீனாவை பார்த்து வரும் நடிகர் ரஜினிகாந்த், எப்படியாவது மீனாவின் கணவர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும், மீனாவுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ரமேஷ் கண்ணா இரங்கல்
தன்னுடைய மகனுக்கு பள்ளிக்கூடத்தில் சீட்டு வாங்கிக் கொடுத்தது கூட மீனாதான் என்று மீனாவின் கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் மிக உருக்கமாக பேசியுள்ளார் இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா. முத்து உள்ளிட்ட பல படங்களில் மீனாவுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். சினிமாவில் ஹீரோயின் ஆவதற்கு முன்பாகவே மீனாவை நன்கு தெரியும், என் குழந்தைகளோடு தான் விளையாடிக் கொண்டிருப்பார். அவருக்கு இப்படியொரு நிலைமை இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கக் கூடாது. அவர் சீக்கிரம் இந்த துயரத்தில் இருந்து மீள இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என ரமேஷ் கண்ணா மனவேதனையுடன் பேசினார்.


Click it and Unblock the Notifications











