»   »  காதலியைக் கரம்பிடித்த நடிகர் ரமேஷ் திலக்!

காதலியைக் கரம்பிடித்த நடிகர் ரமேஷ் திலக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரபல நடிகர்கள் திடீர் திருமணம்- வீடியோ

சென்னை : காமெடி நடிகர் ரமேஷ் திலக் - ஆர்ஜே நவலட்சுமி திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

சூரியன் எஃப்.எம்-மில் பணியாற்றிய காலத்திலிருந்தே இருவரும் காதலித்து வந்ததாக கடந்த ஆண்டு இருவரும் தெரிவித்திருந்தனர்.

அதேபோல் நேற்று, நடிகர் 'மதயானைக்கூட்டம்' கதிர் - சஞ்சனா திருமணம் ஈரோட்டில் நடைபெற்றது.

ரமேஷ் திலக்

ரமேஷ் திலக்

'டிமாண்டி காலனி', 'சூதுகவ்வும்', 'காக்காமுட்டை, உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ரமேஷ் திலக். பிரபல சண்டை பயிற்சியாளர் ராம்போ ராஜ்குமார் மகளும் சூரியன் FM-மின் பிரபல ஆர்ஜேவுமான நவலக்ஷ்மியும், ரமேஷ் திலக்கும் ஆர்ஜேவாக இருந்த காலத்தில் இருந்து காதலித்து வந்தனர்.

காதல் அறிவிப்பு

காதல் அறிவிப்பு

பல வருடங்களாக தங்களது காதல் விஷயத்தை ரகசியமாக வைத்து வந்த இருவரும் கடந்த ஆண்டு தங்களது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் இருவருக்குமான காதலை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

திருமணம்

திருமணம்

மேலும் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர் என்றும் விரைவில் திருமணம் என்றும் அதில் தெரிவித்திருந்தனர். இவர்களது காதல் திருமணம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

கதிர் திருமணம்

கதிர் திருமணம்

இதேபோல், 'மதயானைக்கூட்டம்' கதிர் - சஞ்சனா திருமணமும் நேற்று நடைபெற்றது. நடிகர் கதிர் ஈரோடு தொழிலதிபர் மகள் சஞ்சனா திருமணம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. விரைவில் சென்னையில் வரவேற்பு விருந்து நடைபெற இருக்கிறது.

English summary
Ramesh thilak - RJ Navalakshmi marriage held yesterday at chennai. Actor Kathir's marriage held at Erode yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil