»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

விஜியை நான் காதலிக்கவேயில்லை. விதி என் வாழ்க்கையில் விஜி ரூபத்தில் வந்து என்னைப் பழி வாங்கி விட்டதுஎன்று நடிகை விஜி தற்கொலைக்குக் காரணமாக இருப்பதாக கூறப்பட்ட ரமேஷ் போலீஸில் வாக்குமூலம்அளித்துள்ளார்.

நடிகை விஜி கடந்த மாதம் 27-ம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்குகாரணம் இயக்குநர் ரமேஷ் என்று விஜி எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாகரமேஷை போலீஸார் தேடினர்.

போலீஸார் தேடுவதைத் தெரிந்து கொண்ட ரமேஷ் ஓடி ஒளிந்து கொண்டார். ரமேஷ் மீது 306சட்டப்பிரிவில் வழக்குத் தொடர்ந்து தேடிவந்தனர்.

அவர் தனது வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு செய்தார். இதனையடுத்து, அவர் திருப்பூர்அருகே போலீஸில் சிக்கிக் கொண்டார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு அவர் கொண்டு வரப்பட்டார்.

அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணைக்காக ஒரு நாள் தங்கள்கஸ்டடியில் எடுத்துக் கொண்டனர்.

விஜியை சந்தித்தேன்:

போலீஸாரிடம் ரமேஷ், நான் விஜியை சந்தித்தது கடந்த 1991-ம் ஆண்டு. அப்பொழுது எனது அண்ணன் விஜியைவைத்து உடல், பொருள், ஆனந்தி என்ற டி.வி தொடரை எடுத்தார்.

அந்த டிவி தொடரை எதிலும் ஒளிபரப்பு செய்யமுடியவில்லை. 95-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யமுடிவு செய்யப்பட்டது. அதுவும் முடியவில்லை. பிறகு வேறு தொலைக் காட்சியில் அந்த டிவி தொடர் ஒளிபரப்புசெய்யப்பட்டது. அந்த டிவி தொடர் எடுக்கும் போது தான் விஜியைப் பார்த்தேன்.

அதன் பிறகு 99-ம் ஆண்டு தான் அவரை சந்தித்தேன். நான் விஜியிடம் பழகினேன். ஆனால் அவரைக்காதலிக்கவில்லை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் பொழுது நான் எப்படி விஜியைக்காதலிக்க முடியும். நான் நிரபராதி. விதி என் வாழ்கையில் விஜி ரூபத்தில் விளையாடி விட்டது. இவ்வாறு ரமேஷ்தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டார்:

போலீஸர் எழும்பூர் நீதிமன்றத்தில் ரமேஷை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். விஜி தற்கொலை செய்துகொண்டதும், ரமேஷ் ஓடி ஒளிந்து கொள்ள உதவியாக இருந்த சிபி என்பவரையும் நுங்கம்பாக்கம் போலீஸார்கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more about: chennai ramesh surrender viji

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil