»   »  'கிம்' சும்மா 'கும்'....... என்னா வளைவு நெளிவுடா?...: ராம்கோபால் வர்மாவின் பெருமூச்சு டுவிட்

'கிம்' சும்மா 'கும்'....... என்னா வளைவு நெளிவுடா?...: ராம்கோபால் வர்மாவின் பெருமூச்சு டுவிட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளாதே என்பார்கள். ஆனால் இன்றைக்கு வம்புக்கு வாய் தேவையில்லை டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக்கில் சர்ச்சையான ஒரு பதிவை போட்டால் போதும்... வம்பு தானாக பற்றி பரவிக்கொள்ளும்.

வெளிப்படையாக பேசுகிறேன் என்று கூறி சர்ச்சைக்குள்ளான வகையில் ஒரு சில டுவீட்களில் கூறிவிடும் ராம் கோபால் வர்மா, அவ்வப்போது பலரிடமும் வாங்கிக் கட்டிக்கொள்வார். ரஜினியோடு சுதீப்பின் நடிப்பை ஒப்பிட்டு வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார்.

ராம் கோபால் வர்மா படங்களை இயக்குவதை விட அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டிகொள்வதுதான் அதிகம். பப்ளிசிட்டிக்காக நாகரீகமற்ற கமெண்ட்டுகள், சர்ச்சைக்குரிய டுவீட்டுகளை போட்டு என்ன வேண்டுமானாலும் எழுதுவது என்ற முடிவோடு அவர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்.

ஆசிரியர்களுக்கு கிண்டல்

ஆசிரியர்களுக்கு கிண்டல்

ராம்கோபால் வர்மா இயக்குநர் வேலையை விட்டுவிட்டு முழுநேர இணையவாசியாக மாறிவிட்டார்போல் தெரிகிறது. ஆசிரியர் தினத்துக்கு ‘டீச்சர்ஸ் விஸ்கி' புகைப்படத்தைப் பகிர்ந்து, ஆசிரியர்களைப் பற்றி ஏளனமாக டுவிட்டியிருந்தார். இது போலீஸ் புகார் வரை போனது.

நடிகைகள் பற்றி டுவிட்

நடிகைகள் பற்றி டுவிட்

ராம்கோபால் வர்மா, முன்பு இலியானா, சமந்தா போன்ற நடிகைகளை வம்புக்கு இழுத்த ராம்கோபால் வர்மா இப்போது அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலமான கிம் கர்தாஷியனின் பற்றி சர்ச்சையாகும் விதத்தில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். செய்துள்ளார்

கிம் உடல் அமைப்பு

கிம் கர்தாஷியனின் உடல் அமைப்பை தண்ணீர் பாட்டிலுடன் ஒப்பிட்டு டுவீட் செய்துள்ளார்.
கவர்ச்சியான உடல் அமைப்புக்கு பேர்போன கிம் கர்தாஷியனின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் அவரது கையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை புகழ்வது போன்று நேக்காக கிம்மின் வளைவு, நெளிவுகளை பற்றி ராம் கோபால் வர்மா ஆபாச கருத்தை தெரிவித்துள்ளார்.

வடிவமைப்பு பிடிச்சிருக்கு

பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது டுவீட்களில், 'இந்த தண்ணீர் பாட்டிலின் வடிவமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதுபோன்று ஒரு பாட்டிலின் வடிவமைப்பை எங்கும் கண்டதில்லை என்பதை நேர்மையாக ஏற்கிறேன். இந்த பாட்டில் எந்த ஒரு நிறுவனத்துக்கும் திருமணம்/காப்புரிமை பெறாமல் இருக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

கிம் என்ன சொல்லப்போகிறாரோ?

கிம் என்ன சொல்லப்போகிறாரோ?

கிம் தற்போது ராப் பாடகர் கேயின் வெஸ்ட் என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். ராம்கோபால் வர்மாவின் இந்த கிண்டல் ப்ளஸ் பெருமூச்சு டுவிட்டுக்கு என்ன எதிர்வினை வரப்போகிறதோ தெரியலையே.

English summary
I honestly feel this smart bottle has the best shape ever and I hope it's not been patented/married to one company tweeted director Ramgopal Varma.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil