»   »  பாகுபலிக்கு அப்பா இந்த கபாலி... ரஜினிக்கு நிகரில்லை!- ராம்கோபால் வர்மா

பாகுபலிக்கு அப்பா இந்த கபாலி... ரஜினிக்கு நிகரில்லை!- ராம்கோபால் வர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலிக்கு அப்பா இந்த கபாலி. ரஜினிக்கு நிகரில்லை என்று கபாலி ட்விட்டரைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

ரஜினிகாந்த் நடித்த கபாலி பட டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது.


வெளியான அடுத்த நொடியே சமூக வலைத்தளங்களில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது. டீசரைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள் ரஜினி, ரஞ்சித் மற்றும் குழுவினருக்கு பாராட்டு மழைப் பொழிந்தனர்.


சர்ச்சை

சர்ச்சை

சமூப நாட்களாக ரஜினியைப் பற்றி கொஞ்சம் கிண்டலாகவும், பின்னர் பாராட்டியும் எழுதி சர்ச்சைக்குள்ளான இயக்குநர் ராம்கோபால் வர்மா இந்த டீசரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.


பாகுபலிக்கு அப்பா இந்த கபாலி

பாகுபலிக்கு அப்பா இந்த கபாலி. ரஜினிக்கு நிகரில்லை என்று ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


நான்கு முறைப் பார்ப்பேன்

ரஜினியைப் போல வேறு எந்த சூப்பர் ஸ்டாராலும் திரையில் இந்த அதிர்வை ஏற்படுத்த முடியாது. இந்தப் படத்தை முதல் நாளில் நான்குமுறைப் பார்க்க விரும்புகிறேன் என்று இன்னொரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


அதனால்தான் அவர் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் ஏன் எப்போதும் ரஜினிகாந்தாகவே இருக்கிறார் என்பதற்கு காரணம் உள்ளது. அவுட்ஸ்டேன்டிங்..


ட்விட்டரில் 1.78 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் ராம்கோபால் வர்மாவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Here are few tweets of director Ramgopal Varma praising Rajinikanth's Kabali teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil