»   »  சிவாஜி சிலையை கடற்கரையில் வைத்தாலும் மணிமண்டபத்தில் வைத்தாலும் சம்மதமே! - ராம்குமார்

சிவாஜி சிலையை கடற்கரையில் வைத்தாலும் மணிமண்டபத்தில் வைத்தாலும் சம்மதமே! - ராம்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை எங்கு வைத்தாலும் சம்மதமே. அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கூறியுள்ளார்.

இன்று சிவாஜியின் 16வது நினைவு தினம். இதையொட்டி திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Ramkumar's statement on the removal of Sivaji Statue

இன்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் அளித்த பேட்டியில், "நடிகர் திலகம் சிவாஜி சிலையை எங்கு அமைத்தாலும் சந்தோ‌ஷம்தான்.

தமிழக அரசு அமைத்துள்ள சிவாஜி மணி மண்டபம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

அரசும், அதிகாரிகளும் எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

அப்பா மறைந்து 16 ஆண்டுகள் ஆனாலும் அவர் எல்லோர் மனதிலும் அவர் நிறைந்து இருக்கிறார். அவரது சிலையை கடற்கரையில் அமைத்தாலும் மகிழ்ச்சி. மணி மண்டபத்தில் அமைத்தாலும் மகிழ்ச்சிதான். அரசு, நீதிமன்றம் ஆகியவற்றுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்," என்றார்.

English summary
Sivaji Ganesan son Ramkumar says that he and his family has full accepted govt's decision in removing and re establishing Sivaji statue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil