Just In
- 13 min ago
இவ்ளோ கி.மீ. ரோட் டிரிப்? நண்பர்களுடன் பைக்கில், சிக்கிம் சென்ற நடிகர் அஜித்.சென்னை திரும்புகிறார்!
- 22 min ago
இதுக்காகதான் அவர வெளியே அனுப்ப சொன்னோம்.. பாலாஜியின் ஃபினாலே பேச்சால் கடுப்பான பிரபலம்!
- 43 min ago
தீவிர சிகிச்சை.. 98 வயதில் கொரோனாவை வென்ற ரஜினி, கமல் பட நடிகர்.. முன்னாள் பாடி பில்டராமே!
- 1 hr ago
ஃபைட்டர் இல்லையாம்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட டைட்டில் இதுதான்.. பர்ஸ்ட் லுக் மிரட்டுதே!
Don't Miss!
- Lifestyle
பெண்களே! இந்த காலத்தின்போது உங்க உடல் எடை அதிகரிக்குமாம்... கவனமா இருங்க..!
- News
தேர்தல் கூட்டணி: சென்னையில் ஜன.21-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- Sports
20 ஓவர்கள்... 5 விக்கெட்டுகள்... மெய்டன் ஓவர்கள்... டாட் பந்துகள்... குடுமி நாயகன் அதிரடி!
- Finance
15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..!
- Automobiles
உதிரிபாக தட்டுப்பாடு... சென்னை, சனந்த் ஃபோர்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் இவர்களில் ஒருவர்தான்.. ஜெயிலுக்கு போனது யாருன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் டாஸ்க்கு தேர்வான மூன்று பேர் இவர்கள்தான்.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட ஒரு நபரை சக ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்ய வேண்டும்.
இதேபோல் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்ட இரண்டு பேரையும் சக ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்ய வேண்டும்.
இதெல்லாம் கொடுமை.. பார்க்கும் போதே வாந்தி வருது.. பாலாவை வச்சு செய்த அந்த மூன்று பேர்!

பாலா ரம்யா
இப்படி தேர்வு செய்யப்படும் மூன்று பேர் கேப்டன் டாஸ்க்கில் போட்டியிடுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக செய்தவர்கள் என பாலா மற்றும் ரம்யாவின் பெயரை பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் கூறினர்.

மலேசியா நிஷா
இதனை தொடர்ந்து டாஸ்க்கில் சுவாரசியமாக நடந்து கொண்ட நபராக நிஷா தேர்வு செய்யப்பட்டார். மலேசியா நிஷா பிளைட்டு பிடித்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டதாக கூறி அவரை தேர்வு செய்தனர்.

கேப்டன் டாஸ்க்
இதன்மூலம் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் நிஷா, பாலாஜி, ரம்யா ஆகியோர் போட்டியிட உள்ளனர். கடந்த முறை கேப்டன்ன டாஸ்க்கில் இறுதி வரை சென்றார் நிஷா. ஆனால் இறுதிச்சுற்றில் அனிதா வெற்றி பெற்றார்.

சுவாரசியம் குறைவு
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் நிஷாவுக்கு கேப்டனாகும் வாய்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த வாரம் சுவாரசியம் மற்றும் ஈடுபாடு குறைவாகவும் இருந்த இரண்டு போட்டியாளர்களையும் ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்தனர்.

ஜெயிலுக்கு போன அனிதா
அதன்படி தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள். அந்த வகையில் பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ்களால் அனிதா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர்.