இந்த வாரம் எவிக்ஷன் இருக்கு... அடித்து சொல்லிய ரம்யா கிருஷ்ணன்

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 56 வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. பிக்பாஸ் துவங்கப்பட்டு இன்றுடன் எட்டு வாரங்கள் நிறைவடைகிறது. துவக்கத்தில் 18 பேருடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வைல்ட் கார்டு என்ட்ரியாக புதிதாக அமீர் மற்றும் சஞ்சீவ் வந்துள்ளனர். ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அபிஷேக்கும் வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்துள்ளார். இதுவரை 6 பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது 14 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணா இந்த வாரம் இறுதி நாள் எபிசோட்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

மருத்துவமனையிலிருந்து கமல்

மருத்துவமனையிலிருந்து கமல்

வார இறுதியின் முதல் நாளான நேற்று கமல், மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்ஃபிரன்சிங் முறையில் பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் பேசினார். கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கமல் பேசினார். பிறகு ரம்யா கிருஷ்ணன் தனக்கு பதில் தொகுத்து வழங்குவார் என கூறினார்.

பிரியங்காவை சேவ் செய்த ரம்யா

பிரியங்காவை சேவ் செய்த ரம்யா

தொடர்ந்து இந்த வாரத்தில் நடந்த போர்டிங் ஸ்கூல் டாஸ்கின் போது நடந்தவை பற்றி ரம்யா கிருஷ்ணன் பேசினார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று, இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்பதை அறிவிக்கும் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. நேற்றைய எபிசோடில் பிரியங்கா சேவ் செய்யப்பட்டார்.

டென்ஷனான டே

டென்ஷனான டே

இன்றைய 56 வது நாளுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கருப்பு நிற ஜொலிக்கும் புடவையில் வரும் ரம்யா கிருஷ்ணன், பொதுவாக சன்டே என்றாலே ஃபன்டே. அது நமக்கு. ஆனால் வீட்டிற்குள் உள்ளவர்களுக்கு செம டென்ஷனான டே. யாரு எவிக்ஷன், யாரு சேவ் ஆக போகிறார்கள் என்ற டென்ஷன்.

எவிக்ஷன் உண்டு

எவிக்ஷன் உண்டு

வெளியில் இந்த வாரம் எவிக்ஷன் இருக்குமா, இருக்காதா, முடிவாக இருக்காது என வதந்தி பரவியது. ஆனால் எவிக்ஷன் கண்டிப்பாக இருக்கு என சொல்லி விட்டு, எவிக்ட் செய்யப்பட போகிறவரின் பெயர் இருக்கும் கார்டை பிரித்து காட்ட முயற்சிப்பதாக இந்த ப்ரோமோ முடிக்கப்பட்டுள்ளது.

ப்ரோமோ தேவையே இல்ல

ப்ரோமோ தேவையே இல்ல

இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு ஒரு சிலர், ரம்யா கிருஷ்ணன் நன்றாக தொகுத்து வழங்குகிறார் என்றும், ஒரு சிலர் கமல் சார் எப்போ வருவார் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஐக்கி தான் வெளியேற போகிறார். சீக்கிரம் கமல் சாரை மறுபடியும் கொண்டு வாங்கப்பா. இந்த ப்ரோமோ தேவையே இல்ல பலர் கூறி உள்ளனர்.

மொக்கையா இருக்கு

மொக்கையா இருக்கு

நேற்றைய ஷோ தான் மொக்கையாக இருந்தது என்று பார்த்தால், இன்றைக்கான ப்ரோமோவும் மொக்கையாக தான் இருக்கு. ஆண்டவரே சீக்கிரம் வாங்க. ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவது தங்க வேட்டை நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துது. அக்ஷரா ஏற்கனவே நீங்க ஒரு ரியாலிட்டி ஷோல வந்திருக்கிருக்கீங்க. அப்போ உங்க அண்ணன் கூட வந்தாரா என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X