»   »  ஒரே நேரத்தில் ரஜினி, கமல் படம்... ரம்யா கிருஷ்ணன் "டபுள்" ஹேப்பி அண்ணாச்சி!

ஒரே நேரத்தில் ரஜினி, கமல் படம்... ரம்யா கிருஷ்ணன் "டபுள்" ஹேப்பி அண்ணாச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நேரத்தில் ரஜினியுடன் 2.0 மற்றும் கமலுடன் சபாஷ் நாயுடு என இரண்டு முன்னணி நாயகர்களின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ரம்யாகிருஷ்ணன்.

ஏற்கனவே ரஜினியுடன் ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த படையப்பா படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதேபோல், பஞ்ச தந்திரம் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார் ரம்யாகிருஷ்ணன்.

இந்நிலையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தில் ரம்யாகிருஷ்ணனும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்ன கேரக்டர்...

என்ன கேரக்டர்...

படத்தில் அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த விபரங்கள் இல்லை. இந்தப் படத்தில் நாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்‌ஷய்குமாரும் நடிக்கின்றனர்.

கமலின் மனைவியாக...

கமலின் மனைவியாக...

இது தவிர கமல் இயக்கி நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்திலும் ரம்யாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கமலின் மனைவியாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில்...

ஒரே நேரத்தில்...

ரஜினி, கமல் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்காதா எனப் பல முன்னணி நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கையில் ஒரே சமயத்தில் இருவரது படத்திலும் நடித்து மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாகியிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.

பாகுபலி 2...

பாகுபலி 2...

இந்த இரண்டு படங்கள் தவிர தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் ரம்யாகிருஷ்ணன் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் அவரது வேடம் மிகவும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
On the ‘2.0’ front a new addition to the cast has been made and it is none other than Ramya Krishnan, who is back with Rajini after the blockbuster ‘Padayappa’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil