»   »  ஸ்ரீசாந்த்தின் அம்மாவான ரம்யாகிருஷ்ணன்

ஸ்ரீசாந்த்தின் அம்மாவான ரம்யாகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கும் படத்தில் மாடர்ன் அம்மாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். டிவி சீரியல்களில் கலெக்டராக நடித்து கலக்கி வருகிறார்.

200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணனுக்கு பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அம்மாவாக நடிக்க பல படங்களில் அழைப்பு வந்தாலும் கதையில் கவனம் செலுத்துகிறார் ரம்யா கிருஷ்ணன். தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறார் ரம்யா.

ஹீரோவான ஸ்ரீசாந்த்

ஹீரோவான ஸ்ரீசாந்த்

கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தற்போது சினிமாவில் கவனம் செலுத்தும் ஸ்ரீசாந்த் தற்போது கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

அம்மாவான ரம்யா கிருஷ்ணன்

அம்மாவான ரம்யா கிருஷ்ணன்

ஸ்ரீசாந்த் நடிக்கும் படத்தில் அம்மாவாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அதுவும் மகனுக்கு நம்பிக்கை தரும் மாடர்ன் அம்மாவாக நடிக்கிறாராம்.

கிரிக்கெட் கோட்ச்

கிரிக்கெட் கோட்ச்

மகனுக்கு பயிற்சி அளித்து அவனை சிறந்த கிரிக்கெட் வீரனாக மாற்றும் தன்னம்பிக்கை தரும் அம்மாவாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்தப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டாலும் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறதாம்.

கிரிக்கெட் கதை

கிரிக்கெட் கதை

ஸ்ரீசாந்திற்கு ஏற்றபடி கிரிக்கெட்டை மையப்படுத்தை எடுக்கப்படும் இந்தப்படத்தில் காதல், ரொமான்ஸ் காட்சிகளும் உண்டு. இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் பிரகாஷ். படத்தினை இயக்குபவர் சனா யோதி ரெட்டி.

English summary
Ramya Krishnan is gearing up play Sreesanth's mum next. The veteran of over 200 films will be playing the former India pacer's doting mother, who teaches him a thing or two about cricket, informs Prakash, the scriptwriter for the multi-lingual film directed by Sana Yadi Reddy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil