»   »  கணவரை விவாகரத்து செய்துவிட்டேனா?: ரம்யா கிருஷ்ணன் விளக்கம்

கணவரை விவாகரத்து செய்துவிட்டேனா?: ரம்யா கிருஷ்ணன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் கணவரை விவாகரத்து செய்யவில்லை என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தார். அவர்களுக்கு மகன் உள்ளார். இந்நிலையில் ரம்யா மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

கிருஷ்ண வம்சி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

விவாகரத்து

விவாகரத்து

ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அதனால் தான் அவர் மகனுடன் சென்னையில் தனியாக வசித்து வருகிறார் என்று ஆளாளுக்கு பேசத் துவங்கினர்.

ரம்யா

ரம்யா

கணவரை விவாகரத்து செய்யவில்லை. நாங்கள் இன்னும் ஒன்றாக தான் உள்ளோம். படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வசதியாக நான் சென்னையில் வசிக்கிறேன் என ரம்யா தெரிவித்துள்ளார்.

கணவர்

கணவர்

என் கணவர் தெலுங்கு படங்களை இயக்குவதால் ஹைதராபாத்தில் வசிக்கிறார். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நான் ஹைதராபாத்துக்கோ இல்லை அவர் சென்னைக்கோ வந்து செல்வார் என ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

சுற்றுலா

சுற்றுலா

எனக்கும், கணவருக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு கிடைத்தால் இருவரும் சேர்ந்து எங்காவது சுற்றுலா சென்று வருவோம். நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம் என்கிறார் ரம்யா.

English summary
Ramya Krishnan has rubbished divorce rumours saying that she is staying in Chennai with her son to act in tamil movies and TV serials.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil