அட்லீ - அல்லு அர்ஜுன் படம்.. தீபிகா படுகோனே மட்டுமில்லை இன்னொரு நடிகையும் இருக்காங்களா?.. செம

மும்பை: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ; தற்போது இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநராகியிருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து கெத்து காண்பித்தது. அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் இயக்குகிறார்.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அந்தப் படம் மௌன ராகத்தின் ரீமேக் என்று விமர்சனமும், கிண்டலும் செய்யப்பட்டாலும் அதன் மேக்கிங் பலரையும் வாய் பிளக்க வைத்தது. அதில் இருந்த ரிச் லுக்கை பார்த்து இந்த இயக்குநர் கண்டிப்பாக தவிர்க்க முடியாத இயக்குநராக வருவார் என்று ஆரூடம் கூறப்பட்டது. மேலும் அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு நாட்கள்வரை தியேட்டரில் ஓடியது.

விஜய்யுடன் தொடர்ந்து பயணம்: முதல் பட ஹிட்டுக்கு பிறகு விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படமும் சத்ரியன் படத்தின் ரீமேக் என்று குறை சொல்லப்பட்டது. இருந்தாலும் வழக்கம்போல் அந்தப் படமும் மெகா ஹிட்டடித்தது. தெறி படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல்,பிகில் ஆகிய படங்களை இயக்கினார் அட்லீ. இரண்டு படங்களில் மெர்சல் மெகா ஹிட்டடிதது. குறிப்பாக விஜய்க்கு முதன்முறையாக நூறு கோடி வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

Ramya Krishnan Will Act in Atlee s AA22XA6 Movie
Photo Credit:

ஹிந்தியில் வென்ற அட்லீ: ஆனால் பிகில் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் அட்லீ படத்தின் ஆடியோ வெள்யீட்டு விழாவில் ஓவராக பேசியதுதான் என்று அப்போது பேச்சுக்கள் கிளம்பின. சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிந்தியில் படம் இயக்க சென்றார் அவர். முதல் ஹிந்தி படத்திலேயே ஷாருக்கானை ஹீரோவாக ஃபிக்ஸ் செய்தார். அவருடன் விஜய் சேதுபதில், நயன்தாரா, அனிருத் என தென்னகத்துக்காரர்களை ஒட்டுமொத்தமாக இறக்கினார்.

மெகா ஹிட் ஜவான்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியாகி மெகா ஹிட்டானது. ஆனால் தமிழ்நாட்டில் அந்தப் படம் பெரிதாக எடுபடவில்லை. அதேசமயம் வட இந்தியாவில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மொத்தம் 1000 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது. அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவிருக்கிறார். அப்படத்துக்கு தற்காலிகமாக AA22XA6 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு நடிகைகள்: சைன்ஸ் ஃபிக்‌ஷன் அல்லது சூப்பர் ஹீரோ ஜானரில் இப்படம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க இதில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கியமான வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X