ஊசி போடும் போதும் சிரிக்கிறீங்களே எப்படிங்க.. ரம்யா பாண்டியனிடம் ஜாலியாக ரகளை செய்த ரசிகர்கள்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கட்டாயம் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஊசி போடும் போதும் எப்படிங்க சிரிக்கிறீங்க என ரசிகர்கள் ரம்யா பாண்டியனிடம் ஜாலியாக கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் பிரபலங்கள் அறிவித்து வருகின்றனர். சினிமா நட்சத்திரங்களை தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.

ஊசி போட்டால் தான் அனுமதி
ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியும் என சினிமா தொழிலாளர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தடுப்பூசி போட்டுக்கிட்டேன்
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி, குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், தற்போது பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நான் என் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன் என ரம்யா பாண்டியன் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஊசி போடும் போதும் சிரிப்பு
ஊசி போடும் போது வலிக்கும் என்பதால் பெரும்பாலும் பலரும் பல்லைக் கடித்துக் கொண்டும், அமைதியாக வலியைத் தாங்கிக் கொண்டு ஊசி போட்டுக் கொள்வார்கள். ஆனால், ஊசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் சிரித்ததை பார்த்த ரசிகர்கள், எப்படிங்க ஊசி போடும் போதும் சிரிக்கிறீங்க என கேள்வி எழுப்பி ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

நல்லவேளை ஊசி தெரியுது
மேலும், சிலர் நல்லவேளை ஊசி தெரியும் படி போட்டோ போட்டு இருக்காங்க, இல்லைன்னா ஊசியே போடலைன்னு கிளப்பி விட்டுருப்பாங்க என சமீபத்தில் நயன்தாராவின் தடுப்பூசி போடும் போட்டோ வைரல் மீமானதை வைத்தும் கமெண்ட்டுகள் பறந்து வருகின்றன.

ரம்யா பாண்டியன் அட்வைஸ்
கொரோனா தடுப்பு ஊசியை செலுத்திக் கொண்ட நடிகை ரம்யா பாண்டியன், ரசிகர்களிடம் அனைவரும் கூடிய சீக்கிரமே கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள், அது மட்டும் தான் நம்மை இந்த கொடிய நோயில் இருந்து காப்பாற்றும். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், பழைய படி இயல்பாக நம்மால் நடமாட முடியும் என்றும், பணி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











