Just In
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரொம்ப யோசிச்ச ரம்யா.. தலை குனிஞ்ச கேபி.. கதை சொல்லி மொக்கை வாங்கிய நிஷா.. எல்லாமே செம ஃபன்!
சென்னை: ஜித்தன் ரமேஷ், ஆஜீத், ஷிவானி, சோமசேகரை தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் ரம்யா, கேபி மற்றும் நிஷாவும் பிக் பாஸிடம் நல்லாவே பல்பு வாங்கினார்கள்.
ரம்யா பாண்டியன் எல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியாமல், உள்ளேயும் போய் உட்கார்ந்து கொண்டு சிரித்தது எல்லாம் ரசிகர்களை மேலும் கடுப்பேற்றியது.
நிஷா அக்கா அங்கேயும் போய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்ல ஆரம்பித்த நிலையில், அப்படியே பிக் பாஸ் ஆஃப் பண்ணது வேற லெவல் சம்பவம்.

பேச சொன்னா சிரிக்கிறாங்க
சைலன்ட் கில்லர், டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் என ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்ட ரம்யா பாண்டியனாலும் கடந்த 60 நாட்களில் ரசிகர்களை மகிழ்விக்கும் படி என்ன செஞ்சீங்கன்னு கேட்டா பதில் சொல்லாமல் சிரித்து பிக் பாஸையே கடுப்பேற்றி விட்டார். நான் நானாக இருப்பதே பெரிய பங்களிப்பு என மற்ற போட்டியாளர்களை போலவே மொக்கை போட்டார்.

ஜாலியா இருக்கேன்
ஷிவானியை போலவே நானும் பிக் பாஸ் வீட்டில் நல்லா டான்ஸ் ஆடி ரசிகர்களை என்டர்டெயின் பண்றேன் என்றார் சுட்டிக் குழந்தை கேபி. கமல் சாருக்கு முன்னாடி எல்லார் மாறியும் இமிடேட் பண்ணி ஆடியது, ரிவர்ஸ் டாஸ்க்கை வித்தியாசமா யோசிச்சி நானும் ஆஜீத்தும் பண்ணோம் என சில பாயின்ட்டுகளை சொன்னாலும், பிக் பாஸ் இன்னும் சொல்லுங்க என கேட்க கேட்க, அப்படியே தலை குனிந்து, பிக் பாஸ் முடியல பிக் பாஸ் என்கிற ரேஞ்சுக்கு அழுவது போல ஆகிவிட்டார்.

மொக்கை வாங்கிய நிஷா
ஜோக் சொல்லி ரசிகர்களை மகிழ்விக்க தான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தேன். ஆனால், என் ஜோக்கை எல்லாரும் மொக்கை ஜோக்குன்னு சொல்லி கிண்டல் பண்றாங்க, எப்போதும் எல்லாத்துலையும் முழு பங்களிப்பை கொடுத்துட்டு வரேன்னு சொன்ன நிஷாவை அங்கேயே நிறுத்தி என்ன என்ன விஷயத்தில் என்ன என்ன பங்களிப்பு கொடுத்தீங்கன்னு சொல்ல சொல்லி மொக்கைப் பண்ணார்.

கதை சொல்ற இடமில்லை
அப்புறம் வேற என்ன சொல்றதுன்னு யோசித்த நிஷா, ஒரு குட்டி கதை சொல்ல ஆரம்பித்தார். உடனே அவரை அங்கேயே ஸ்டாப் பண்ண பிக் பாஸ், உங்க கிட்ட இப்போ யாரும் கதை கேட்கல.. பிக் பாஸ் வீட்ல கடந்த 60 நாட்களா என்ன என்ன பங்களிப்பு கொடுத்தீங்கன்னு சொல்லுங்க என நல்லா வெளுத்து வாங்கி விட்டார்.

என்டர்டெயின்மென்ட் இருக்கு
இன்னைக்கு கமல் சார் ஷோ என்பதால், வெள்ளிக்கிழமை என்ன நடந்தது என்பதில், இன்னும் மத்தவங்களாம் என்ன பேசினாங்கன்னு காட்டுவாங்கனு தெரியுது. இன்னும் நிறைய பேர் பேசணும் என்பதால், அடுத்த வாரமும் இது செல்லுமா என்பது தெரியவில்லை. தனித்துவத்தை பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்னும் கடைபிடிக்கவில்லை என இன்னைக்கு கமல் நல்லா கலாய்க்க போறார்.