ரம்யாவுக்கு மேல இருக்காங்கப்பா அவங்க அம்மா.. எவ்வளவு சூசகமா பொண்ணுக்கு அட்வைஸ் கொடுத்தாங்க பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிலவரம் குறித்து தனது மகளான ரம்யாவுக்கு சூசகமாய் அட்வைஸ் கொடுத்தார் அவரது அம்மா.
பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது ரம்யாவின் குடும்பத்தினர் வந்தனர். முதலில் ரம்யாவின் சகோதரர் மெயின் டோர் வழியாக வந்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசிக் கொண்டிருந்தார்.
எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போதே பிக்பாஸ் வீட்டின் ஸ்டோர் ரூம் பெல் அடித்தது. இதனை தொடர்ந்து ஸ்டோர் ரூமின் கதவை திறந்த ரியோ, ஷாக்கானார். காரணம் ஸ்டோர் ரூமில் ரம்யாவின் அம்மா நின்று கொண்டிருந்தார்.

என்னுடைய பேட்டரி
தனது அம்மாவை பார்த்த ரம்யா, செம்ம ஹேப்பியானார். என்னுடைய பேட்டரி வந்துருக்கு என்று தனது அம்மாவை கட்டியணைத்துக் கொண்டார். தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசும் ரம்யாவின் அம்மா, அவங்க அழற டைப்லாம் கிடையாது என்றார்.

ட்ரேட் மார்க் சிரிப்பு
அதனைக் கேட்ட சோம சேகர், மத்தவங்களதான் அழ விடுவாங்க என்று கூற, அதனைக் கேட்டு ரம்யாவும் அவரது அம்மாவும் ஒரே மாதிரியான ட்ரேட் மார்க் சிரிப்பை கொட்டினர்.

எப்படி சொல்ல முடியும்?
தொடர்ந்து கிட்சனில் சமையலுக்கு உதவியப்படியே ஹவுஸ்மேட்ஸுடன் பேசினார் ரம்யாவின் அம்மா. அப்போது வெளியே என்ன சொல்றாங்க என்று ரம்யா கேட்க, அதை எப்படி சொல்ல முடியம். சொன்னா நீங்க அலர்ட் ஆயிடுவீங்க.

பின்னாடி பேசாதீங்க
நீங்க நீங்களாதான இருக்கீங்க, அப்படியே இருங்க. 85 நாட்கள்ல பெட்டரா கொடுத்துருக்க.. டாஸ்க்ல ஃபுல் எஃபோர்ட் போடு என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் மற்றவர்களை பத்தி யாரும் பின்னாடி பேசாதீங்க. யாரும் யாரைப் பத்தியும் கம்ப்ளையன்ட் பண்ணி பேசாதீங்க.

தினமும் மகளை பார்க்கிறேன்
ஓபனா ஷேர் பண்ணிக்குங்க.. மத்தவங்கக்கிட்ட இன்னொருத்தர் பத்தி பேசாதீங்க.. என்று பொதுவாய் மகளுக்கு அட்வைஸ் கூறினார். தொடர்ந்து பிக்பாஸ் நேரம் முடிந்ததாக கூறியதை தொடர்ந்து, நன்றி பிக்பாஸ், நான் தினமும் என் மகளை பார்க்கிறேன்.

எடிட் பண்ணாம போடுங்க
என்னை என் மகள் பார்க்க வைத்ததற்கு நன்றி என்றார். மேலும் கமல் சாருக்கும் நன்றி, எனக்கு தீபாவளி வாழ்த்து கூறியதற்கு நன்றி என்றார். உங்களுக்கு நன்றி கூற இதைவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்ற அவர், பிக்பாஸ் இதை எடிட் பண்ணாம கொஞ்சம் கமல் சாருக்கு கன்வே பண்ணிடுங்க என்று கோரிக்கை விடுத்தார்.
Recommended Video

சூசகமாக அலர்ட் செய்த அம்மா
இறுதியாக ஹவுஸ்மேட்ஸுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார் ரம்யாவின் அம்மா சாந்தி. இதை அனைத்தையும் பார்த்த ரசிகர்கள், ஆரி குறித்து அவதூறாக ரம்யா பின்னால் பேசியதை சூசகமாக சொல்லி மகளை அலர்ட் செய்கிறார் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











