twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் நடிக்கல.. என் முன்னாடி எந்த திரையும் இல்ல.. யாரையும் காயப்படுத்தல.. ரம்யா பிரச்சாரத்த பாருங்க!

    |

    சென்னை: கன்ஃபெஷன் ரூமில் இருந்து தனக்கு வாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்தார் ரம்யா பாண்டியன்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் வெற்றி பெற தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

    வெற்றிக்காக அடிதடி வரை இறங்கிவிட்டனர் ரசிகர்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ் கன்ஃபெஷன் ரூமில் இருந்து தங்களுக்காக பிரச்சாரம் செய்தனர்.

    எவிக்ஷனில் கடைசி வரை போராடும் ரம்யா.. பிரபல இசையமைப்பாளர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!எவிக்ஷனில் கடைசி வரை போராடும் ரம்யா.. பிரபல இசையமைப்பாளர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

    யாரையும் காயப்படுத்தியது இல்லை

    யாரையும் காயப்படுத்தியது இல்லை

    அதன்படி கன்ஃபெஷன் ரூமுக்குள் வந்த ரம்யா பாண்டியன், என்னுடைய எமோஷன்ஸ் ஃபேக்காக இருந்ததில்லை. இந்த வீட்டில் நான் நானாகதான் இருந்திருக்கேன். எனக்கு முன்னால் எந்தத் திரையும் இல்லை. இந்த வீட்டில் நான் யாரையும் காயப்படுத்தியது இல்லை.

    தகுதியாய் நினைக்கிறேன்..

    தகுதியாய் நினைக்கிறேன்..

    எனக்கு பிடித்தவர்களாக இருந்தாலும் கூட விளையாட்டுக்காக என் மனசை மீறி நாமினேட் செய்திருக்கிறேன். உண்மையாக இருந்திருக்கிறார். இதைத்தான் நான் என்னுடைய தகுதியாய் நினைக்கிறேன் என்றார்.

    கடமைக்காக பண்ணல

    கடமைக்காக பண்ணல

    அடுத்த கன்ஃபெஷன் ரூமுக்குள் வந்த ஆஜித் எல்லா டாஸ்க்கையும் முழு ஈடுபாட்டுடன் செய்தேன். கடமைக்காக நான் எதையும் பண்ணல. தெரிஞ்ச விஷயங்களுக்காக நான் நிறைய பேசியிருக்கிறேன். தெரியாத விஷயத்தை பேச மாட்டேன்.

    பொய் சொன்னதில்லை

    பொய் சொன்னதில்லை

    நான் இந்த வீட்டில் பொய் சொன்னதில்லை. எந்த இடத்திலும் யாருக்கிட்டேயும் மரியாதை இல்லாமல் பேசியதில்லை. மற்றவர்களை பற்றி பின்னாடி நிறைய பேசியதில்லை. கண்டிப்பா பேசியிருக்கிறன். இந்த வாரம் நான் ஓபன் அப் ஆகிவிட்டதாக கூறினீர்கள். அதுவே சந்தோஷம்தான் என்றார்.

    என்னுடைய பெரிய ஆசை

    என்னுடைய பெரிய ஆசை

    அடுத்து வந்த ஷிவானி பிக்பாஸில் வெற்றி பெற 106 நாட்கள் இருக்க வேண்டும். இதில் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை. நான் எப்போதும் அந்த ஆசையை விட்டுக்கொடுத்ததில்லை. எல்லாவற்றிலும் முழு ஈடுபாட்டுடன் கொடுத்துள்ளேன்.

    அடுத்த கட்டத்துக்கு..

    அடுத்த கட்டத்துக்கு..

    பத்தலைன்னா இருக்கப் போகும் மீதி நாட்களிலும் இருப்பேன். மத்தவங்களை மாதிரி போராடினேனா என்று தெரியவில்லை. ஆனால் என் வயசுக்கான போராட்டங்களை பார்த்துள்ளேன். இதில் வெற்றி பெற்றால், என் வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

    மக்கள் மனதில் நல்ல இடம்

    மக்கள் மனதில் நல்ல இடம்

    இந்த வீட்டில் இருந்த அத்தனை நாட்களிலும் நேர்மையாக இருந்துள்ளதாக நம்புகிறேன். இங்கிருந்து வெளியில் போகும்போது மக்கள் மனசுல நல்ல இடத்துல இருக்கணும். அதுதான் என்னுடைய வெற்றியாக பார்க்கிறேன் என்றார் ஷிவானி.

    குவாலிட்டிஸ் இருக்கு

    குவாலிட்டிஸ் இருக்கு

    அவரை தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்குள் வந்த கேபி, பிக்பாஸ் டைட்டில் பெற குவாலிட்டிஸ் என்னிடம் இருக்கிறது. முதலில் என்னை காணவில்லை என்று போர்டு போடும் அளவில் இருந்தேன். நான் யார் என்று காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

    எங்கே பேசணுமோ அங்கே

    எங்கே பேசணுமோ அங்கே

    என்ன சூழ்நிலையிலும் பாஸிட்டிவாக இருந்துள்ளேன். எல்லாவற்றையும் இந்த வீட்டில் ஸ்போர்ட்டிவாக எடுத்துள்ளேன். நியாயமா எங்கே பேசணுமோ அங்கே பேசியிருக்கிறேன், தேவையில்லாத இடங்களில் பேசாமலும் வேண்டிய இடங்களில் பேசியும் இருக்கிறேன் என்று கூறினார். பிரச்சாரம் செய்த அனைத்து ஹவுஸ்மேட்ஸுக்கும் நடிகர் கமல் வாழ்த்து கூறினார்.

    English summary
    House mates did campaign for themselves in confession room. Ramya said she did not hurt anyone in the house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X