Just In
- 44 min ago
கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா? டிரெண்டாகும் #Thalapathy65
- 1 hr ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 1 hr ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 1 hr ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
Don't Miss!
- News
திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்!
- Finance
கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..!
- Sports
கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தேவையில்லாமல் ஷிவானியிடம் ஆரியை பற்றி தவறாக பேசிய ரம்யா.. தேவையே இல்லாத ஆணி என விளாசும் பேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் சம்பந்தமே இல்லாமல் ஷிவானியிடம் ஆரி குறித்து தவறாக பேசிய ரம்யா பாண்டியனை விளாசி வருகின்றனர் ரசிகர்கள்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. இதில் ஆஜித் உட்பட 5 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.
நாமினேஷன் புராசஸ் முடிந்த பிறகு ஷிவானியும் ரம்யாவும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய ரம்யா, ஆஜித் ரொம்ப ஃபீல் பண்ணிட்டான். கோபமாயிட்டான் என்று ஆரம்பித்தார்.

தேவையில்லாத பேச்சு
அதற்கு பதில் சொன்ன ஷிவானி, சோம் நல்லா டாஸ்க் பண்றாரு, அவரை எப்படி சொல்றது என்று கேட்டு தான் ஏன் ஆஜித்தை நாமினேட் செய்தேன் என்ற காரணத்தை கூறினார். இதனைக் கேட்ட ரம்யா, சம்பந்தமே இல்லாமல், ஆரி குறித்து பேசினார்.

யாருக்கும் புடிச்சமாதிரி தெரியல
அதாவது, ஆரி எல்லாமே கரெக்ட்டா பண்ணனும்னு நினைச்சு பண்றாரு. அது ஆடியன்ஸுக்கு பிடிக்குதா பிடிக்கலையான்னு எனக்கு ஒரு டவுட் எப்போதுமே இருக்கும். நேத்து வந்த காலுமே எனக்கு அந்த டவுட்லதான் இருக்கு. புடிச்சுதுங்ற மாதிரி எனக்கு எந்த ஆங்கிள்லேயும் தோனல என்றார்.

மத்தவங்களை பிளேம் பண்றாரு
இதனைக் கேட்ட ஷிவானி, அவர் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்பது எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு. சில நேரம் அவர் குரூப்பிஸம் இருக்குன்னு செல்றதெல்லாம் கரெக்ட்டா சொல்றாரு.
அவருக்குன்னு ஒன்னு வரப்போ, என்ன பண்றாரு செல்பிஷா மத்தவங்களை பிளேம் பண்ணி விட்டுடுறாரு என்று கூறினார்.

மத்தவங்களை இன்சல்ட் பண்ணி..
அதற்கு பதில் சொல்லும் ரம்யா, கிடைக்கிற கேப்பில் எல்லாம் தன்னுடைய பிளஸையும் மத்தவங்களோட மைனஸையும் சொல்லிடுறாரு. என்ன கேப் கிடைச்சாலும் மத்தவங்களை இன்சல்ட் பண்ணிடுறாரு என்றார்.

இன்சல்ட் பண்ணினால் எப்படி?
அதற்கு பதில் சொல்லும் ஷிவானி, தன்னை காப்பாத்திக்க மத்தவங்களை தப்பா புரஜெக்ட் பண்றாரு. அப்போது பேசும் ஷிவானி அவருக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு நாமினேஷன்ல எடுத்து சொல்றீங்க, கிடைக்கிற கேப்பில் எல்லாம் மத்தவங்களை இன்சல்ட் பண்ணினால் எப்படி என்று கேட்டார்.

ரம்யாவுக்கு ஆரி காய்ச்சல்
ரம்யா பேசியதை பார்த்த ரசிகர்கள் சம்பந்தமே இல்லாமல் அந்த இடத்தில் ஆரியை பற்றி எதற்கு பேச வேண்டும்? அதுவும் ஆரி தவறானவர் என்பதை போல் காட்ட ஏன் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் ரம்யாவுக்கு ஆரி காய்ச்சல் பிடித்திருப்பதாகவும் கூறினர்.