»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஜூன் 11, 2003

ரம்யா கிருஷ்ணன் திடீர் திருமணம்

ஒரு வழியாய் தனது நீண்டகால பாய் பிரண்டான தெலுங்கு டைரக்டர் கிருஷ்ணவம்சியை மணந்தார் ரம்யாகிருஷ்ணன். இன்று காலை ஹைதராபாத்தில் இந்தத் திடீர் திருமணம் நடந்தது. இதில் ரம்யாவை விடகிருஷ்ணவம்சி 5 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை மட்டும் அழைத்து இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். திருமணச் செய்தி குறித்துக் கேள்விப்பட்டு விரைந்த பத்திரிக்கையாளர்கள் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை.

தமிழரான ரம்யா கிருஷ்ணன் தமிழில் தான் முதலில் அறிமுகமானார். வெள்ளை மனசு படத்தின் மூலம்ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

ஆனால், அதன் பின் இங்கு அதிகமான வாய்ப்புக்கள் கிடைக்காததால் தெலுங்குக்குச் சென்றார். அங்கு முன்னணிஹீரோயினாக சில காலம் வலம் வந்தார். இப்போதும் தனது வயதையும் மீறிய கட்டழகுடன் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

ரஜினியின் படையப்பாவில் நீலாம்பரியாக வந்து ரஜினிக்கு இணையாகப் பேசப்பட்டார். இதன் பின்னர்

தமிழில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த இவருக்கு பஞ்சதந்திரத்தில் முக்கிய ரோல் கொடுத்தார் கமல்.அதில் அட்டகாசமாக நடித்திருந்தார்.

இப்போது தான் தமிழில் சரத்குமாருடன் பாறை படத்தில் நடித்து முடித்தார். குறும்பு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடிமுடித்த கையோடு, எஸ்கார்ட் லேடி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.

இந் நிலையில் சமீபகாலமாகவே இவரது திருமண பேச்சுக்கள் சூடு பிடித்திருந்தன. வீட்டில் இவருக்கு வேறுமாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், நெடுங்காலமாகவே கிருஷ்ணவம்சியுடன் திருமணம்செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த ரம்யா கிருஷ்ணன் அவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கில் குலாபி, அனந்தபுரம், இந்தியில் சக்தி போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணவம்சி, ரம்யாவைவைத்து சந்திரலேகா என்ற தெலுங்குப் படத்தை எடுத்தார்.

அப்போது தான் இருவருக்கும் காதல் அரும்பியது. இருவரும் சேர்ந்தே வாழ ஆரம்பித்தனர். ஆனால், இருவரும்அடிக்கடி சண்டைபோட்டுப் பிரிவதும் வழக்கமாக இருந்தது. இப்போது தங்களது நீண்ட காலக் காதலைதிருமணத்தில் முடித்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil