»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் மார்க்கண்டேயனியான ரம்யா கிருஷ்ணன் நடிக்க வந்து 25 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது.

இவர் கடந்த ஆண்டு தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியைத் திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருந்ததால் கடந்த சில மாதங்களாக படங்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு சுவிட்சர்லாந்தில் உள்ள தனது சகோதரிவீட்டுக்குப் போய் விட்டார்.

நீண்ட ஓய்வுக்குப் பின் ஹைதராபாத்தில் திரும்பினார். அவருக்கு கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலை ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து ரம்யாவின் தாயார் நித்யா, தந்தை கிருஷ்ணன். சகோதரி வினயா, கணவர் கிருஷ்ண வம்சி ஆகியோர் மருத்துவமனையில்இருந்த அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil