Just In
- 22 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 2 hrs ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் இவங்க நடிக்கிறாங்களாமே..! இதுல யாரு அய்யப்பன், யாரு கோஷி?
சென்னை: அய்யப்பனும் கோஷியும் படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ஹீரோக்கள் பற்ற் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், அய்யப்பனும் கோஷியும்.
சச்சி இயக்கி இருந்த இந்தப் படத்தில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் ஒரு நடிகர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகில் தொடரும் அதிர்ச்சி!

வரவேற்பு
ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கேரளாவில் பலத்த வரவேற்பை பெற்றது. அதிகாரப் பின்னணி கொண்ட ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் படத்தின் கதை. படத்தை எவ்வளவு இயல்பாக கொடுக்க முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தார்கள்.

ஈகோ மோதல்
அட்டப்பாடி வனப்பகுதியில் மதுபானங்கள் வைத்திருக்கத் தடை இருக்கிறது. அதை மீறி, அங்கிருந்து மதுபாட்டில்களுடன் ஊட்டி செல்லும் வழியில் போலீஸ் பரிசோதனையில், சப் இன்ஸ்பெக்டர் பிஜூ மேனனிடம் சிக்கிக் கொள்கிறார் பிருத்விராஜ். முன்னாள் ராணுவ வீரரான பிருத்வி, போலீஸை அடிக்கப் பாய, பிஜூவுக்கும் ஈகோ வெளிப்படுகிறது. பிறகு அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை சொல்லும் படம் இது.

கதிரேசன்
இதில் இடம்பெற்றிருந்த, களக்காத்த சந்தனமேரம் வெகுவேகா பூத்திருக்கு என்ற பாடல் பட்டி தொட்டிங்கும் ஹிட்டாகி உள்ளது. இந்தப் பாடலை நஞ்சம்மா என்ற பழங்குடியினப் பெண் பாடியிருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர், பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

தெலுங்கு ரீமேக்
தமிழ் ரீமேக்கில் சரத்குமாரும் சசிகுமாரும் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதை கதிரேசன் மறுத்தார். இந்நிலையில் இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை, சித்தாரா என்டர் டெயின்மென்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. இதில் பாலகிருஷ்ணாவும் ராணாவும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.