twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யானைகளுக்காக காட்டை காப்பாற்றினாரா ராணா டகுபதி.. பிரபு சாலமனின் காடன் படம் எப்படி இருக்கு?

    |

    சென்னை: நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் பிரபு சாலமன் உருவாக்கி உள்ள காடன் திரைப்படம் இன்று ரிலீசாகி உள்ளது.

    Recommended Video

    இந்த படம் PRAYER ஆக மாறியது |Director Prabhu Solomon Talk | Filmibeat Tamil

    ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழில் காடன் என்கிற தலைப்பிலும் தெலுங்கில் ஆரண்யா என்கிற டைட்டிலிலும் வெளியாகி உள்ளது.

    Movie Review : காடன் திரைவிமர்சனம்- யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம் Movie Review : காடன் திரைவிமர்சனம்- யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்

    இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி எனும் டைட்டிலில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு பதிலாக புல்கித் சாம்ராத் நடித்துள்ளார். காடன் திரைப்படம் குறித்து ட்விட்டரில் மக்கள் என்ன விமர்சனத்தை முன் வைத்துள்ளனர் என்பதை இங்கே காண்போம்.

    காடன் கதை

    காடன் கதை

    மைனா, கும்கி, தொடரி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நிஜக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த காடன் திரைப்படம். யானைகளின் வழித்தடத்தில் மிகப்பெரிய சுவரை எழுப்பி, அதற்குள் ஒரு டவுன் ஷிப்பை கட்ட திட்டமிடுவதை தடுக்க சமூக போராளியாக ராணா டகுபதி போராடி வெல்வதே இந்த காடன் படத்தின் கதை.

    கண் முன்னே காடு தெரியுது

    கண் முன்னே காடு தெரியுது

    காடன் படத்தில் கண் முன்னே காட்டை விரித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். காட்டுவாசியாகவே நாயகன் ராணா டகுபதி வாழ்ந்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் குறும்புத்தனமான லவ் டிராக் ரசிகர்களுக்கு போரடிக்காமல் படத்தை நகர்த்த உதவுகிறது. யானைகளின் வாழ்க்கை பற்றியும் அவற்றை வாழ விட வேண்டிய நோக்கம் குறித்தும் படம் நன்றாகவே பாடம் நடத்துகிறது என இந்த நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார்.

    கார்ப்பரேட் சதி

    கார்ப்பரேட் சதி

    நல்ல வலுவான திரைக்கதையை கொண்டுள்ளது காடன் திரைப்படம். சமூகத்திற்கு தேவையான ஒரு கருவை கதைக் களமாக கொண்டு காடன் திரைப்படத்தை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கி உள்ளார். காடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்கும் கார்ப்பரேட் சதிகளை அம்பலப்படுத்தும் படமாக இந்த காடன் அமைந்துள்ளது என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

    இரண்டாம் பாதி தொய்வு

    இரண்டாம் பாதி தொய்வு

    காடன் திரைப்படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்களுடன் சென்ற நிலையில், இரண்டாம் பாதி சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியையும் இயக்குநர் பிரபு சாலமன் கூடுதல் கவனத்துடன் கையாண்டு இருந்தால் இந்த படத்தின் வெற்றி இன்னமும் பெரிதாக இருந்திருக்கும் என இந்த ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஏகப்பட்ட லூப் ஹோல்ஸ்

    ஏகப்பட்ட லூப் ஹோல்ஸ்

    ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளனர். முதல் பாதி நன்றாகவே நகர்கிறது. ஆனால், திரைக்கதையில் உள்ள ஏகப்பட்ட ஓட்டைகள் இரண்டாம் பாதியை ரொம்பவே சுமாரான படமாக மாற்றி விடுகிறது. எந்தவொரு ட்விஸ்ட்டும் இல்லாமல், அடுத்த காட்சி இப்படித்தான் வரும் என்பது போலவே காடன் உள்ளது என இவர் விமர்சித்துள்ளார். காடன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. படத்திற்காக படக்குழு போட்டுள்ள முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Director Prabhu Solomon’s Kaadan movie releases today. Rana Daggubati and Vishnu Vishal done their roled with full of justification but so many loop holes in the script will affect the movie in certain places.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X