»   »  தொடர்ந்து கவுதம் மேனன் படங்களைக் கைப்பற்றும் 'பல்லாலத் தேவன்'

தொடர்ந்து கவுதம் மேனன் படங்களைக் கைப்பற்றும் 'பல்லாலத் தேவன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதம் மேனன் இயக்கி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் ராணாவுக்கு கிடைத்திருக்கிறது.

தனுஷ்-மேகா ஆகாஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு நேற்றுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 2 வது நாள் படப்பிடிப்பில் நடிகர் ராணா டகுபதி கலந்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே கவுதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் ராணா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா மூலம் 2 வது முறையாக கவுதம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ராணாவுக்கு கிடைத்துள்ளது.

இதில் ராணா முக்கியத் தோற்றத்தில் நடித்து வருவதாக கூறுகின்றனர். ரொமாண்டிக்+ திரில்லர் படமாக என்னை நோக்கி பாயும் தோட்டா உருவாகி வருகிறது.

இதற்குமுன் ராணா நடிப்பில் வெளியான பாகுபலி தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தற்போது தமிழ்ப் படங்களின் பக்கம் ராணாவின் கவனம் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After Acham Enbathu Madamaiyada Rana Daggubati Again Team Up with Gautham Menon for Ennai Nokki Paayum Thotta.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil