»   »  நடிகை லஷ்மி மஞ்சுவுக்காக மூட்டை தூக்கி சம்பாதித்த "பல்லால தேவன்"!

நடிகை லஷ்மி மஞ்சுவுக்காக மூட்டை தூக்கி சம்பாதித்த "பல்லால தேவன்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை லஷ்மி மஞ்சுவின் டிவி நிகழ்ச்சிக்காக தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் புரோமோஷன் பணியில் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ராணா மூட்டைத் தூக்கி பணம் சம்பாதித்துள்ளார்.

மேமு சைதம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகை லஷ்மி மஞ்சு. சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியான இதற்கு டோலிவுட் பிரபலங்கள் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ராணா, அகில் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத்தி ஆகியோர் வித்தியாசமான முறையில் பணம் சம்பாரித்து நன்கொடையாக அளித்துள்ளனர்.

அகில்...

அகில்...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேமு சைதம் நிகழ்ச்சியின் புரொமோஷனுக்காக நாகர்ஜூன் - அமலா தம்பதியின் இளைய மகனான அகில் ஆட்டோ ஓட்டினார். அதன் மூலம் கிடைத்த வருவாயை சமூக சேவைக்காகக் கொடுத்தார்.

ரகுல் ப்ரீத்தி...

அதனைத் தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரித்தி காய்கறி விற்றார். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள காய்கறிக் கடை ஒன்றில் அவர் கடந்த 5ம் தேதி காய்கறிகளை விற்பனை செய்தார்.

ராணா...

இவர்களைத் தொடர்ந்து பாகுபலி புகழ் நடிகர் ராணா, மூட்டை தூக்கியுள்ளார். ரைத்தூ சந்தைக்கு வந்த காய்கறி மூட்டைகளைத் தூக்கி பணம் சம்பாரித்த ராணா, அவற்றை சமூக சேவைக்கு தருவதாக தெரிவித்தார்.

நன்றி...

தனது நிகழ்ச்சி புரொமோஷனுக்காக மூட்டை தூக்கிய ராணாவிற்கு நடிகை லஷ்மி மஞ்சு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

English summary
After Akhil Akkineni, actor Rana Daggubati and actress Rakul Preet Singh are set to appear as coolie and vegetable vendor for actress Lakshmi Manchu's upcoming TV show "Memu Saitham".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil