Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மாநாடு ரீமேக்கில் ஹீரோ யாரு வேணா இருங்க...எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதில் யாருன்னும் சொல்லுங்க
சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் மாநாடு.சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 25 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த , படம் 100 நாட்களை மட்டுமல்ல 100 கோடி கலெக்ஷனையும் கடந்ததுள்ளது. ரசிகர்களால் தியேட்டரிலும், ஓடிடியிலும் கொண்டாடப்பட்ட படம். சையின்ஸ், ஃபிக்சன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்ட மாநாடு, தமிழில் வெளியான முதல் டைம் லுப்பை மையப்படுத்திய படமாக வெளிவந்தது.
இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதால் இதை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யும் முயற்சி நடந்து வருகிறது. மாநாடு படத்தின் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட ரீமேக் உரிமைகளை சுரேஷ் டகுபதி வாங்கி உள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதமே இவர் ரீமேக் உரிமைகளை வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது லேட்டஸ்ட் தகவலாக, விரைவில் மாநாடு படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஹீரோவாக ராணா டகுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் சிம்பு நடித்த ரோலில் நாக சைதன்யா தான் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது ராணா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநாடு தெலுங்கு ரீமேக்கையும் வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது அவர் நாக சைதன்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகு மாநாடு ரீமேக் வேலைகள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர். சிம்பு ரோலில் ராணா நடித்தால் என்ன, நாக சைதன்யா நடித்தால் என்ன, இல்லை வேறு யாரு நடித்தால் என்ன. எங்க தலைவன் எஸ்.ஜே.சூர்யா ரோலில் யாருப்பா நடிக்க போறது அதை முதலில் சொல்லுங்கள் என கேட்டு வருகிறார்கள்.
ஆனால் எஸ்.ஜே.சூர்யா நடித்த தனுஷ்கோடி ரோலில் அவர் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என படக்குழு நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் எஸ்.ஜே.சூர்யா தான் தெலுங்கு ரீமேக்கிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாங்க
சுட்டதே
எங்க
அப்பாவோட
ஃபர்ஸ்ட்
பாட்ட
தான்..
யுவன்,
வெங்கட்
பிரபு
சொல்லும்
சுட்ட
கதை!