செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்… கோபத்தில் செல்போனை பிடுங்கிய பாகுபலி பட வில்லன்

திருப்பதி: பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ராணா டகுபதி.

கோலிவுட் முன்னணி நடிகையான த்ரிஷாவை காதலித்து வந்த ராணா, அவரை திருமணம் செய்யவிருந்தார்.

இந்நிலையில், திருப்பதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்த ராணா, ரசிகரின் செல்போனை பிடுங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

நட்சத்திரக் குடும்பத்தின் வாரிசு

நட்சத்திரக் குடும்பத்தின் வாரிசு

தெலுங்குத் திரையுலகின் நட்சத்திரக் குடும்பமான நாகர்ஜுனாவின் உறவினரான ராணா, 2010ல் வெளியான லீடர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ச்சியாக டோலிவுட்டில் பல படங்களில் கமிட் ஆன ராணா, தமிழில் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். அஜித்தின் நண்பராக நடித்த ராணாவுக்கு தமிழிலும் ரசிகர்கள் வரத் தொடங்கினர். அப்போது தான் 'பாகுபலி' திரைப்படமும் வெளியானது.

மறக்க முடியுமா பல்வாள்தேவனை?

மறக்க முடியுமா பல்வாள்தேவனை?

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு வில்லனான பல்வாள்தேவன் கேரக்டரில் மிரட்டியிருப்பார் ராணா. செம்ம வெயிட்டான இந்த வில்லன் பாத்திரம், ராணாவை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதனால் அவருக்கு தொடர்ந்து பல படங்களில் வில்லன் பாத்திரம் அமைந்தது. அதன் பின்னர் த்ரிஷாவுடன் காதலில் விழுந்த ராணா, அவரை திருமணம் செய்துகொள்ள இருந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் அதுவும் பொய்யாகிப் போனது.

குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற ராணா

குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற ராணா

சமீபத்தில் ராணா நடிப்பில் 'பீம்லா நாயக்' திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு வில்லனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சாய் பல்லவியுடன் நடித்த 'விராட பருவம்' திரைப்படமும் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற ராணா, அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

ரசிகரின் செல்போனுக்கு நேர்ந்த துயரம்

ரசிகரின் செல்போனுக்கு நேர்ந்த துயரம்

சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலை விட்டு வெளியேறிய ராணாவுடன், ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். நடந்து சென்று கொண்டிருந்த ராணாவுக்கு முன்பாக தனது செல்போனை நீட்டிய அந்த ரசிகர், 'சார் ஒரேயொரு செல்ஃபி" என பரிதாபமாகக் கேட்டார். ஆனால், கடுப்பான ராணா திடீரென செல்போனை பிடுங்கிவிட்டு சிறிது நேரம் அந்த ரசிகரை அலைய விட்டார். பின்னர் சிரித்துக் கொண்டே அந்த செல்போனை ரசிகரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவக்குமார் சில வருடங்கள் முன்னர் ஒரு நிகழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X