»   »  பாகுபலி நடிகர் ராணாவுக்கு வலது கண் தெரியாது: வைரலாகும் வீடியோ

பாகுபலி நடிகர் ராணாவுக்கு வலது கண் தெரியாது: வைரலாகும் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனக்கு வலது கண்ணில் பார்வையில்லை என்று நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தில் பல்லாள தேவனாக நடித்து புகழ் பெற்றவர் ராணா. இந்த படத்திற்காக அவர் கடினமாக உழைத்துள்ளார். படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் பிரபாஸுடன் சேர்த்து ராணாவையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ராணாவின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

ஆறுதல்

ஆறுதல்

2016ம் ஆண்டில் லட்சுமி மஞ்சு நடத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் ராணா கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவரின் குடும்பத்தாருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

கண் பார்வை

கண் பார்வை

எனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை. இடது கண்ணை மூடிவிட்டால் சுத்தமாக கண் தெரியாது. நான் சிறுவனாக இருந்தபோது டாக்டர் எல்.வி. பிரசாத் எனக்கு ஆபரேஷன் செய்தார் என்றார் ராணா.

பார்வை

பார்வை

வலது கண் என்னுடையது அல்ல. ஒருவர் மரணம் அடைந்த பிறகு கண்தானம் செய்யப்பட்ட கண் இது. கவலைகள் ஒரு நாள் போய்விடும். நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ராணா தெரிவித்தார்.

வைரல்

2016ம் ஆண்டில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் வீடியோ பாகுபலி 2 படம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

English summary
Rana Daggubati who has done an exceptionl work as Bhallala Deva in SS Rajamouli's Baahubali series has said that he is blind from his right eye.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil