ஆலியா பட்டின் எடை பற்றி கமெண்ட்..சமூக வலைதளத்தில் எதிர்ப்பு..பகிரங்க மன்னிப்பு கேட்ட ரன்பீர் கபூர்
சென்னை : அயன் முகர்ஜீ இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கும் படம் பிரம்மாஸ்திரா. இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பாக பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ள பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 9 ம் தேதி தியேட்டரில் ரிலீசாகிறது.
இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் பிரபல டைரக்டர் ராஜமெளலி வெளியிடுகிறார். இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த முதல் பாகத்தை Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர்.

காலில் விழுந்த ரன்பீர் கபூர்
இப்படத்தின் ப்ரமோஷன் சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூனா, இயக்குனர் ராஜமெளலி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நாகர்ஜுனா, ராஜமெளலி ஆகியோரின் காலில் பப்ளிக்காக ரன்பீர் கபூர் விழுந்து வணங்கியது, மூவரும் ஒன்றாக தமிழக பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்த போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகின.

ஒரு வார்த்தையில சிக்கி கிட்டாரே
அதே சமயம் நிகழ்ச்சியில் மனைவி ஆலியா பட்டின் எடை பற்றி ரன்பீர் கபூர் பேசிய பேச்சுக்கள் நெட்டிசன்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டது."முன்பே பிரம்மாஸ்திரா படத்தை ஏன் பெரிதாக புரோமோட் செய்யவில்லை?" என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆல்யா பட் பதில் சொல்லும்போது, "அப்படியில்லை நிச்சயமாக நாங்கள் பிரம்மாஸ்திராவை புரமோட் பண்ணுவோம். ஆனால் இப்போதைக்கு எங்களின் கவனம் குழந்தையின் மீதுதான்" என்று சொல்ல, அப்போது குறுக்கிட்ட ரன்பீர், ஆலியாவின் கர்ப்ப எடை அதிகரித்தது பற்றி கமெண்ட் செய்தார்.

ரன்பீரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
ஆனால் ஒரு கர்ப்பவதியைப் பார்த்து இப்படிச் ரன்பீர் சொன்னதற்காக நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை கூறிவந்தனர்.இந்நிலையில் இன்று சென்னையில் இதுகுறித்து பேசிய ரன்பீர், "முதலில் நான் என் மனைவியை வாழ்வின் அனைத்திலும் நேசிக்கிறேன்.நான் செய்தது வேடிக்கையான ஒரு நகைச்சுவை தான், வேறு நோக்கம் இல்லை.

பகிரங்க மன்னிப்பு கேட்ட ரன்பீர் கபூர்
இதனால் உணர்ச்சிவசம் தூண்டப்பட்டிருந்தாலோ அல்லது புண்படுத்தப்பட்டிருந்தாலோ, அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆலியாவிடம் பின்னர் இதுபற்றி கூறினேன். ஜோக் தான் அடித்தேன் என சொன்னேன். அவரும் உண்மையில் சிரித்தார், உண்மையில் நான் ஒரு மோசமான நகைச்சுவை உணர்வைக் கொண்டவனாக இருக்கிறேன். அது சில சமயங்களில் இப்படி ஆகும். யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்" என பகிரங்கமாக மன்னிட்டு கேட்டார்.


Click it and Unblock the Notifications











